நாட்டின் சுதந்திர தினத்தை வீறு நடைபோட்டு ஃபேஷன் ஷோவாக கொண்டாடும் கோவை மாணவிகள்

Independence Day Fashion Show: கோவையில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில்,  இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய  ஆடை அணிந்து ஒய்யார நடை நடந்து அசத்திய மாணவியர்கள்

கோவையில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில்,  இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய  ஆடை அணிந்து ஒய்யார நடை நடந்து அசத்திய மாணவியர்கள்… 

மேலும் படிக்க | இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32... 2022இல் 70!

1 /5

இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்   கோவை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின்  மனையியல் துறை  சார்பாக,நடைபெற்ற  இந்திய  கலாச்சார ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

2 /5

75 வது சுதந்திர  தினவிழாவை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இதில்,கல்லூரி மாணவிகள் இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு ஆடை கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக இந்திய ஒருமை பாட்டின்   பாரம்பரியத்தின்  முக்கியத்துவம் வாய்ந்த ஆடைகளை  அணிந்து ஆடை அணிவகுப்பு நடத்தினர்.

3 /5

குறிப்பாக தமிழகத்தின் சேலை கலாச்சாரத்தை போற்றும் விதமாக  இந்தியதேசிய கொடியின் மூவர்ணத்தைக் கொண்டு சேலைகளை மாணவிகள் அணிந்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்..

4 /5

கோவை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின்  மனையியல் துறை  சார்பாக,நடைபெற்ற  இந்திய  கலாச்சார ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

5 /5

75 வது சுதந்திர  தினவிழாவை வரவேற்கும் கோவை கல்லூரி மாணவிகள்