கோவிட் -19 க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என பிரதம்ர் வேண்டுகோள்.
இதுவரை 1 கோடி 10 லட்சம் 96 ஆயிரம் 731 பேர் கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சம் 57 ஆயிரம் 51 பேர் இறந்துள்ளதாகவும், இன்றுவரை 1 கோடி 7 லட்சம் 75 ஆயிரம் 169 பேரும் குணமாகியுள்ளனர் எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona Vaccine) முதல் டோஸை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று போட்டிக்கொண்டார். நாட்டில் தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி பிரதமருக்கு வழங்கப்பட்டது. (படம்: IANS)
தடுப்பூசியின் முதல் அளவை எடுத்துக் கொண்டதைப் பற்றி, தனது ட்விட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் தெரிவித்தார். (போட்டோ: ANI)
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) முதல் டோஸ் எடுத்துள்ளதாகவும், டெல்லியில் எய்ம்ஸில் பணிபுரியும் புதுச்சேரியின் செவிலியர் பி நிவேதா (Sister P Niveda) தடுப்பூசி அளவைக் கொடுத்தார். கோவிசின் என்பது பாரத் பயோடெக் தயாரித்த ஒரு சுதேச தடுப்பூசி ஆகும் (Photo:ANI)
தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்த ரூ .250 கட்டணமாக வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் இது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடபப்டும் (படம்: PTI)