Top 5 Shares: உச்சத்தைத் தொடும் பங்கு விலைகள்! முதலீடு செய்ய ஏற்ற டாப் 5 பங்குகள்

Stock Market Hike: உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், இந்திய பங்குச்சந்தை நாள்தோறும் புதிய சாதனையை உருவாக்கி வருகிறது. 

நிறுவனங்களின் கார்ப்பரேட் புதுப்பிப்புகள் காரணமாக, பல பங்குகள் முதலீட்டுப் பார்வையில் இருந்து கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது.  

(பொறுப்புத் துறப்பு: இது சந்தை அடிப்படையிலான பரிந்துரைகள் மட்டுமே, ஜீ மீடியா இதற்கு எந்தவித உறுதியும் கொடுக்கவில்லை)

1 /8

சென்செக்ஸ் 65300 என்ற அளவைத் தொட்ட நிலையில், நிஃப்டி 19340 என்ற அளவைக் கடந்துள்ளது. இதனால் சந்தையும் அதிக அளவிலான புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியும் இறுதியாக  மிக அதிக அளவைக் குறிக்கும் பச்சை நிறத்தில் முடிவடைந்தது.  

2 /8

தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பங்குகளை வாங்க தரகு நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன. தற்போதைய விலையை விட இந்த பங்குகளில் 42 சதவீதம் வரை வலுவான வருமானம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

3 /8

தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ லோம்பார்டில் வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 30, 2023 அன்று விலை ₹ 1,341. இந்த பங்கு, ₹1550 வரை போகலாம். முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 16% வருமானம் பெறலாம்.

4 /8

தரகு நிறுவனமான எம்கே, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் பங்கை வாங்க பரிந்துரை செய்துள்ளது. ஜூன் 30, 2023 அன்று விலை ₹ 1,081 என்ற அளவில் இருந்தது, இந்த பங்கு, ₹1225 வரை விற்பனையாகலாம். முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 13% வருமானம் பெறலாம்.

5 /8

தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், மஹாநகர் கேஸ் பங்கை வாங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 28, 2023 அன்று, 1050 ரூபாயாக இருந்த இந்த பங்கு விலை, ₹1290 வரை அதிகரிக்கலாம். முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 23% வருமானம் பெறலாம்.  

6 /8

தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், பிவிஆர் ஐநாக்ஸ் பங்கை வாங்க அறிவுறுத்தியுள்ளது. 30 ஜூன் 2023 அன்று, ₹ 1375 ஆக இருந்த இதன் விலை, ₹1950 ஆக அதிகரிக்கலாம். அப்போது, முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 42% வருமானம் பெறலாம்.

7 /8

தரகு நிறுவனமான Religare ப்ரோக்கிங் GHCL இல் வாங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இலக்கு ₹568. ஜூன் 30, 2023 அன்று ₹ 515 ஆக இருந்தது. முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 11% வருமானம் பெறலாம்.

8 /8

தரகு நிறுவனமான Religare ப்ரோக்கிங் GHCL இல் வாங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இலக்கு ₹568. ஜூன் 30, 2023 அன்று ₹ 515 ஆக இருந்தது. முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 11% வருமானம் பெறலாம்.