IPL Auction 2024: ஸ்டீவ் ஸ்மித் முதல் உமேஷ் வரை - இவர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் மவுசு இருக்காது..!

IPL 2024 Auction: ஸ்டீவ் ஸ்மித் முதல் இந்தியாவின் உமேஷ் யாதவ் வரை குறிப்பிட்ட சில பிளேயர்களுக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் மவுசு இருக்காது. அதாவது அவர்கள் ஏலம் போக வாய்ப்பில்லை.

 

1 /8

2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் ஐபிஎல் ஏலத்துக்கு பதிவு செய்த கேதார் ஜாதவின் பெயர் ஏலத்துக்கு முன்பே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. அதனால் இவர் இந்த முறை ஏலத்தில் பங்கேற்க மாட்டார்.  

2 /8

இந்திய அணியின் முக்கிய டெஸ்ட் பந்துவீச்சாளராக இருந்த உமேஷ் யாதவ் அடிப்படை விலையாக 2 கோடி நிர்ணயித்திருப்பதால் இந்த விலைக்கு அவரை அணிகள் ஏலம் எடுப்பதற்கான வாய்ப்பு குறைவு.  

3 /8

ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேல் அதிக விக்கெட்டுகளை எடுத்தாலும் முக்கியமான நேரங்களில் அதிக ரன்களை கொடுப்பதால் அவரை இந்த முறை ஏலம் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டுமா? என்பது கேள்விக்குறியே.   

4 /8

வங்கதேச அணியின் முக்கிய வீரராக இருக்கும் முஸ்தாபிசுர் ரஹ்மான், இந்த முறை ஐபிஎல் கான்டிராக்ட் கிடைப்பது கடினமே. அவர் 2 கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்திருப்பதால் அந்த விலைக்கு அவரை வாங்க அணிகள் தயக்கம் காட்டுவார்கள்.  

5 /8

ஸ்டீவ் ஸ்மித் திறமையான வீரராக இருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் முத்திரை பதிக்க முடியவில்லை. அவரை ஏலம் எடுக்க அணிகள் தயக்கம் காட்டுகின்றன. இந்தமுறை ஸ்மித் ஏலம் போகாமல் இருந்தாலும்  வியப்படைய தேவையில்லை.  

6 /8

ஷாபாஸ் நதீமின் ஐபிஎல் பயணம் டெல்லி கேப்பிட்டல்ஸுடன் தொடங்கியது. ஆனால் 2022 முதல், அவர் ஓரங்கட்டப்பட்டார். இந்தமுறை அவருக்கு ஏலத்தில் ஜாக்பாட் அடிப்பது கடினமே. 

7 /8

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வருன் ஆரோன் ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு அணிகளுக்காக ஆடியிருந்தாலும் முத்திரை பதிக்க தவறினார். இந்தமுறை ஏலத்துக்கு காத்திருக்கும் அவரை அணிகள் எடுக்கும் வாய்ப்பு குறைவு. 

8 /8

ஹனுமா விஹாரி ஐபிஎல் ஏலத்தில் இருந்தாலும் அவருக்கு பெரியதாக மவுசு இல்லை. 2013 ஆம் ஆண்டு முதல் வெறும் 24 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இந்தமுறை அவர் ஏலம்போக வாய்ப்பில்லை.