லக்னோ அணியில் இருந்து விலகும் ராகுல், ஆர்சிபி அணிக்கு ரிட்டன்ஸ்?

லக்னோ சூப்பர் ஜெயண்ஸ்ட் அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல்.

 

 

லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கே சென்று கேப்டன் கே.எல்.ராகுலுடன் வாக்குவாதம் செய்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த அணியில் இருந்து இந்த சீசனுடன் விலக இருக்கிறார் கே.எல்.ராகுல்.

 

 

1 /8

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 9.4 ஓவர்களில் அந்த ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

2 /8

இது ஐபிஎல் வரலாற்றில் ரெக்கார்டு சேஸிங்காவும் மாறியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவரும் ஓப்பனிங் இறங்கியது முதல் பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்க விட்டுக் கொண்டே இருந்தனர். சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி சன்ரைசர்ஸ் அணியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.  

3 /8

அதேநேரத்தில் இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 33 பந்துகள் ஆடி 29 ரன்கள் மட்டுமே எடுக்க, சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களும் குவித்தனர்.  

4 /8

இதனை மைதானத்தில் இருந்து நேரில் பார்த்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் கோயங்கா அதிருப்தியின் உச்சத்துக்கே சென்றார். போட்டி முடிந்ததும் மைதானத்துக்கு சென்ற அவர் கேப்டன் கேஎல் ராகுலுடன் வாக்குவாதம் செய்தார். அவரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

5 /8

அத்துடன் லக்னோ அணியின் எக்ஸ் பக்கத்திலும் நிக்கோலஸ் பூரன் இந்த ஆண்டு சூப்பரான பேட்டிங் ஆடுவதாகவும் அவரை புகழும் வகையில் போஸ்ட் போடப்பட்டது. இதனால் உடனே கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவுக்கு கேஎல் ராகுல் வந்துவிட்டார் என தகவல்கள் கூறுகின்றன.  

6 /8

இது குறித்து விளக்கம் அளித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர், இந்த சீசனுக்கு லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் தொடர்வார் என தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அடுத்த ஆண்டு இந்த அணியில் ராகுல் தொடரமாட்டார் என்பதும் உறுதியாகியுள்ளது.  

7 /8

அப்படி ராகுல் லக்னோ அணியில் இருந்து வெளியேறினால் கர்நாடக மாநில அணியான ஆர்சிபிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து ஆர்சிபி அணி என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை.  

8 /8

லக்னோ அணி, இப்போதைய சூழலில் ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. எஞ்சியிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம்.