IPL, சேம்பியன்ஸ் லீக், ஒலிம்பிக்ஸ், இதில் எதை பார்க்கப்போகிறீர்கள்: மாணவர்களிடன் பிரதமர் மோடி

கொரோனா தொற்று பரவல் காரணமாக, மத்திய அரசு மாணவர்களுக்கான ஒரு மிகப்பெரிய அறிவிப்பை அளித்தது. CBSE பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படாது என்றும், இதற்கு பதிலாக மதிப்பீட்டிற்கான ஒரு மாற்று வழி கண்டறியப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக இருந்ததா என்பதை தெரிந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று மாணவர்களுடன் உரையாடினார்.

1 /5

கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட ஒரு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி சிபிஎஸ்இ மாணவர்களுடன் வியாழக்கிழமை உரையாடினார். முன் அறிவிப்பு இல்லாமல் இந்த அமைர்வில் கலந்துகொண்ட அவர் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஆச்சரியப்படுத்தினார். அவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் கவலைகள் குறித்து அவர்களுடன் பிரதமர் உரையாற்றினார். 

2 /5

'ஆரோக்கியமே மகா பாக்கியம்' என்ற மந்திரத்தை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மாணவர்களிடம் கூறினார்.

3 /5

இப்போது பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் நேரத்தை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

4 /5

IPL, சாம்பியன்ஸ் லீக், ஒலிம்பிக்ஸ் என இந்த மூன்றில் எதை பார்ப்பதில் மாணவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும் என்றும் பிரதமர் மாணவர்கள் கேட்டார். 

5 /5

மாணவர்கள் தங்கள் கல்லூரி சேர்க்கைகளில் இப்போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை பெற்றோர்கள் வெளிப்படுத்தினார்கள்.