IRCTC தனது முதல் Pod ஹோட்டலை மும்பையில் திறந்தது

மும்பைக்கு ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. IRCTC தனது அதிநவீன Pod ஹோட்டலை மும்பையில் திறந்துள்ளது...

மத்திய ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் தன்வே, அதிநவீன Pod ஓய்வு அறைகளை புதன்கிழமை திறந்து வைத்தார்.  இந்த புதிய சேவை, ரயில் பயணிகளுக்கு மிகவும் வசதியான பயணத்தை வழங்கும் என்று IRCTC தெரிவித்துள்ளது.

ALSO READ |  கின்னஸ் உலகச் சாதனைப் பதிவுகள்

1 /5

ஐஆர்சிடிசி தனது முதல் 'பாட்' கான்செப்ட் ஓய்வு அறைகளை மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது, இது இந்திய ரயில்வேயின் முதல் 'Pod' Concept ஓய்வறை ஆகும்.  Source: IRCTC

2 /5

இந்தியாவில் ரயில் மூலம் பயணம் செய்பவர்கள், குறிப்பாக வணிகப் பயணங்களில் பயணிப்பவர்களுக்கு பாட் வசதி ஒரு கேம்சேஞ்சராக இருக்கும்.  Source: IRCTC

3 /5

வழக்கமான ஹோட்டல்களால் வழங்கப்படும் பெரிய, விலையுயர்ந்த அறைகள் தேவைப்படாத விருந்தினர்களுக்கு மலிவு விலையில், இரவு தங்கும் வசதியை Pod ஹோட்டல்கள் வழங்குகின்றன.  Source: IRCTC

4 /5

பயணிகளுக்கு இலவச வைஃபை, கழிவறை, ரீடிங் லைட், சார்ஜிங் பாயின்ட், லக்கேஜ் அறை, ஷவர் ரூம், டிவி போன்றவற்றை Pod FACILITY வழங்குகிறது.  இந்த வசதிகள் அனைத்தும மலிவான விலையில் வழங்கப்படுகின்றன.  Source: IRCTC

5 /5

இந்த போட் ஹோட்டலில் தங்குவதற்கு ஒருவர் 12 மணிநேரத்திற்கு ரூ.999 மற்றும் 24 மணிநேரத்திற்கு ரூ.1,999 செலுத்த வேண்டும்.  Source: IRCTC