365 நாளும் 2GB டேட்டா... மாதம் 126 ரூபாய் தான்... ஜாக்பாட் ரீசார்ஜ் திட்டம் இதுதான்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று 365 நாளும் 2GB டேட்டா உள்ளிட்ட பல்வேறு பலன்களை வழங்குகிறது. இந்த திட்டம் குறித்தும், அதன் விலை குறித்தும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

  • Oct 30, 2023, 18:01 PM IST
1 /7

ஜியோ, ஏர்டெல், வோடோபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டிக்கு மத்தியில் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு அதிரடி சலுகைகளையும், பல ரீசார்ஜ் திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.   

2 /7

பிஎஸ்என்எல் சிம்மை பலரும் இரண்டாவது சிம்மாக பயன்படுத்துகின்றனர். இதனால், அவர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்ப மாட்டார்கள். எனவே, இந்த வருடாந்திர ரீசார்ஜ் பிளான் நல்ல பலன்களை தரும்.   

3 /7

இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.1515 ஆகும். இதன் வேலிடிட்டி 365 நாள்கள் ஆகும். இதில் கிடைக்கும் பலன்களை இங்கு காணலாம்.   

4 /7

இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டாவை வாடிக்கையாளர் பெறுவார். இந்த டேட்டா முடிந்தால், இணைய வேகம் 40kbps ஆக குறையும். மொத்தம் 730GB டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் காலிங்கும் உள்ளது.    

5 /7

இதன் திட்டத்திற்கு நீங்கள் மாதம் 126 ரூபாய் செலவழிக்கிறீர்கள். அதாவது, ஒருநாளுக்கு 5 ரூபாய். எனவே, மற்ற நிறுவனங்களின் வருடாந்திர திட்டங்களை விட இது சிறந்த பலன்களை கொண்டுள்ளது.  

6 /7

ஒருவர் அன்லிமிடெட் கால் மற்றும் தினமும் 2GB டேட்டா வேண்டும் என்று நினைத்தால் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்.   

7 /7

இருப்பினும், இந்த திட்டம் சில பகுதிகளுக்கு கிடைக்காது. ரீசார்ஜ் செய்யும் முன் அது உங்கள் பகுதியில் கிடைக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.