சஞ்சனாவுக்கு மூன்று முடிச்சிட்டு திருமண பந்தத்தில் இணைந்தார் Jasprit Bumrah

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா திங்களன்று பிரபல மாடலான சஞ்சனா கணேசனை திருமணம் செய்துக் கொண்டார். கோவாவில் திருமணம் நடைபெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு பும்ரா விடுப்பு எடுத்திருந்தார். இன்ஸ்ட்ராகிராமில் தனது திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார் பும்ரா.  

Also Read | ICC Rating: Narendra Modi Stadium ஆடுகளம் சராசரியா? மிகவும் ஏற்றதா? 

1 /5

விளையாட்டுத் துறையில் பிரபலமான பும்ரா - சஞ்சனா ஜோடி திருமண களத்தில் வலது கால் எடுத்து வைக்கின்றனர். (Photograph:Instagram)

2 /5

பும்ரா தனது திருமணத்திலிருந்து இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார் இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துக் கொண்ட புகைப்படத்துடன் இந்த குறிப்பையும் எழுதியிருந்தார்: "காதல், அதற்கு நீங்கள் தகுதியானவர் என்று உணர்ந்தால், அது உங்கள் வாழ்க்கைப் போக்கை இயக்குகிறது. அன்பினால் வழிநடத்தப்பட்ட நாங்கள் ஒன்றாக ஒரு புதிய பயணத்தைத் தொடங்கினோம். இன்று எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும். எங்கள் திருமணச் செய்தியை மகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது எங்கள் பாக்கியம் என்று கருதுகிறோம்"- ஜஸ்பிரீத் & சஞ்சனா (Photograph:Instagram)  

3 /5

கோவாவில் ஞாயிற்றுக்கிழமையன்று பும்ரா மற்றும் சஞ்சனாவின் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றன. திங்கட்கிழமை திருமணம் நடைபெற்றது. விழாவிற்கு விருந்தினர்கள் தங்கள் மொபைல் போன்களை எடுத்து வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. (Photograph:Instagram)

4 /5

இந்த தலைமுறையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பும்ரா கருதப்படுகிறார், மேலும் 19 டெஸ்ட் போட்டிகளில் 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 67 ஒருநாள் போட்டிகளில் இருந்து 108 ஸ்கால்ப்களும், 50 ஒருநாள் போட்டிகளில் 59 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ((Photograph: AFP)

5 /5

சஞ்சனா கணேசன் பிரபல விளையாட்டு தொகுப்பாளர் மற்றும் மாடல் ஆவார். இந்தியன் பிரீமியர் லீக்கின் போது நிகழ்ச்சிகளை வழங்குகிறார். ஐபிஎல் உரிமையான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொகுப்பாளராகவும் உள்ளார். 2014ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகுப் போட்டியில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்தவர் சஞ்சனா. விளையாட்டுத் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு எம்டிவியின்   ஸ்ப்ளிட்ஸ்வில்லா 7 (Splitsvilla 7) நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சஞ்சனா கணேசன். (Photograph:Instagram)