ஜிதேஷ்

  • Nov 30, 2024, 19:19 PM IST
1 /6

ஐபிஎல் 2025 மெகா ஏலம் கடந்த நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிஷப் பந்த் லக்னோ அணியால் ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதன் மூலம் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.     

2 /6

ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்து. வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 23 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.  

3 /6

இருப்பினும், இவர்களைவிட ஜிதேஷ் சர்மா ஐபிஎல் 2025ல் 5400% சம்பள உயர்வை பெற்றுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அவரை அதிக விலைக்கு வாங்கி உள்ளது.  

4 /6

இதற்கு முன்பு ஜிதேஷ் சர்மாவை பஞ்சாப் அணி ரூ. 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் தற்போது ஆர்சிபி அணி அவரை ரூ. 11 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் ரூ. 10.80 கோடி அதிகம் சம்பாதித்து உள்ளார்.   

5 /6

சென்னை அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முயன்றது. ஆனால் ரூ. 6.75 கோடிக்கு அதிகமாக சென்றதால் வேண்டாம் என்று முடிவு செய்தனர். இறுதியில் ஆர்சிபி ரூ. 11 கோடிக்கு எடுத்தது.  

6 /6

தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றுள்ளதால் ஜிதேஷ் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். ஜிதேஷ் இந்தியாவுக்காக 9 முறை விளையாடியுள்ளார். இருப்பினும் பெரிதாக ரன்கள் அடித்தது இல்லை.