ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வனுக்கு பதில் நடிக்க வேண்டியது இவரா?

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

 

1 /5

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு மற்றும் பிருத்விராஜ் முக்கிய வேடங்களில் நடித்த ப்ளூ ஸ்டார் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்தது.  கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.  

2 /5

இரண்டு வாரங்கள் ஆகியும் தற்போதும் திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் ஷாந்தனுவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.  

3 /5

அசோக் செல்வன் நடித்த ரஞ்சித் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி பாண்டியன் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.  

4 /5

இந்நிலையில், ப்ளூ ஸ்டார் படத்தில் முதலில் அசோக் செல்வனுக்கு முன்பு நடிக்க இருந்தது கவின் தான் என்று இயக்குனர் ஜெயக்குமார் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.  அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு இளம் நடிகர் தேவைப்பட்டதால் அவரை தேர்வு செய்துள்ளார்.  

5 /5

ஆனால், கால் சீட் காரணமாக கவினால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று இயக்குனர் கூறி உள்ளார்.  புளூ ஸ்டார் படம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.