விராட் கோலிக்கு RCB-ன் வித்தியாசமான வரவேற்பு

கிங் விராட் கோலியை ஏகபோகமாக வரவேற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

ஐபிஎல் 2022 தொடருக்காக விராட் கோலி ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார்

 

1 /4

இலங்கை தொடருக்குப் பிறகு ஓய்வெடுத்த கோலி, ஐபிஎல் தொடங்குவதையொட்டி பெங்களுரு அணியுடன் இன்று இணைந்தார்

2 /4

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், ஆர்சிபி அணியை விட்டு விலக மனமில்லை என வெளிப்படையாக அறிவித்தார்

3 /4

பெங்களுரு அணிக்கு இம்முறை டூபிளசிஸ் கேப்டனாக செயல்பட உள்ளார். ஆர்சிபி அணியின் கிங்காக இருக்கும் கோலி, முதன்முறையாக வேறொருவரின் கேப்டன்சியின் கீழ் விளையாட இருக்கிறார்

4 /4

இன்று ஆர்சிபி அணி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்த அவரை, பெங்களுரு அணி நிர்வாகம் ஆரத்தி எடுத்து வரவேற்றது. சோஷியல் மீடியாவில் கிங் கோலி பேக் என பையர் விட்டுள்ளது. ஆர்சிபி அணியுடன் கோலி இணைந்திருப்பதை பெங்களூரு அணியின் ரசிகர்கர்களும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.