Bill Gates: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு மாளிகை

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வாஷிங்டனில் ஒரு அரண்மனை வைத்திருக்கிறார். இந்த அரண்மனையின் சொத்து மதிப்பு 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

60 அடி குளம், பரந்த வரவேற்பு மண்டபம், தோட்டம் கொண்ட பில் கேட்ஸின் அதி சொகுசு பல கோடி மாளிகையின் புகைப்படங்கள்..

Also Read | மும்பை இந்தியன்ஸ் தங்கியுள்ள ஐக்கிய அரபு எமிரேட்டின் ஆடம்பரமான ரிசார்ட்.!!

1 /7

கோடீஸ்வரர் ஜோடி பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமாகி 27 வருடங்கள் கழித்து மே 4 அன்று தங்கள் பிரிவை அறிவித்தபோது உலகமே திகைத்துப்போனது.. பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டு தனித்தனியாக வாழ்கின்றனர்.

2 /7

இந்த ஆடம்பர மாளிகைக்கு  Xanadu 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அரண்மனைக்கென்று பிரத்யேக கடற்கரையும் உண்டு. உலகின் மிக நவீன தனியார் குடியிருப்புகளில் ஒன்றின் புகைப்படங்கள் இவை…  

3 /7

இந்த மாளிகை 66,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. பில் கேட்ஸ் 1988 இல் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்த மாளிகைக்கான நிலத்தை வாங்கினார். கட்டுமானத்தை முடிக்க சுமார் ஏழு ஆண்டுகள் ஆனது.

4 /7

பில் கேட்ஸின் மாளிகை, "பூமியின் பாதுகாப்பான குடியிருப்புகளின் ஒன்று" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த ஆடம்பர மாளிகையை ஒரு மலைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை இறக்கிக் கட்டியிருக்கின்றனர். இந்த வீடு செலவு குறைந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது.

5 /7

அரண்மனை மாளிகையில் மொத்தம் 7 படுக்கையறைகள் மற்றும் 24 குளியலறைகள் உள்ளன.

6 /7

ஆடம்பரமான மாளிகையில் 60 அடி குளம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் நீருக்கடியில் இசை அமைப்பு உள்ளது.

7 /7

இந்த ஆடம்பர மாளிகையில் 2,300 சதுர அடி பரப்பளவில் வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹாலில் ஒரு காக்டெய்ல் விருந்துக்கு 200 விருந்தினர்கள் மற்றும் இரவு விருந்துக்கு சுமார் 150 விருந்தினர்கள் வரும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.