காதலர்கள் கவனத்திற்கு! ‘இந்த’ நாடுகளில் முத்தமிட தடை; மீறினால்..!!

பொதுவாக, காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த முத்தம் இடும் பழக்கம் உள்ளது. ஆனால், உலகில் பல நாடுகளில் பொது இடங்களில் முத்தமிடுவது சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொது இடத்தில் முத்தமிட்டு பிடிபட்டால், சிறைத் தண்டனை அல்லது கடுமையான தண்டனைகள் கூட உண்டு. இப்படி தடை விதித்துள்ள நாடுகளில் சில பாலியல் சுற்றுலாவுக்கு பிரபலமானவை என்பதும் ஆச்சர்யம் அளிக்கும் கூடுதல் தகவல். ஆனால் இங்கு காதலை பொது இடத்தில் வெளிப்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது. 

1 /5

சீன வழக்கப்படி, காதலை பொது இடத்தில் வெளிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு காதலை பொது இடத்தில் வெளிப்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது.

2 /5

வியட்நாமிய கலாச்சாரத்தில் பெரும் மாற்றங்கள் இருந்தபோதிலும், காதலை பொது இடத்தில் வெளிப்படுத்துவது த்டை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் ஊருக்கு வெளியே அல்லது நகரத்தில் இருந்தால், உங்கள் காதல் நடத்தையை கட்டுப்படுத்து வேண்டியது அவசியம். இல்லை என்றால் சிக்கலில் சிக்க நேரிடும்.

3 /5

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொது இடங்களில் கைகளை பிடித்துக்கொண்டு சாதாரணமாக முத்தமிடுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படிச் செய்வது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். பொது இடங்களில் முத்தமிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும்.

4 /5

இந்தோனேசியாவில் பொது இடங்களில் முத்தமிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இப்படி செய்து பிடிபட்டால், அந்த ஜோடிக்கு சிறை தண்டனை கிடைக்கலாம், இதுமட்டுமின்றி, இங்கு பொது இடத்தில் சவுக்கினால் அடிக்கும் பழக்கமும் உள்ளது.

5 /5

தாய்லாந்து செக்ஸ் சுற்றுலாவுக்கு பிரபலமானது. பாங்காக்கில் பல சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன. தாய்லாந்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் பொது இடத்தில் முத்தமிடுவது இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும், அல்லது  சிறை தண்டனை விதிக்கப்படலாம்.