IND vs ENG: கேஎல் ராகுல், ஜடேஜா அதிரடி விலகல்... இந்திய அணியில் இந்த 3 வீரர்கள்!

IND vs ENG Injury: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டு முக்கிய வீரர்களான கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர். அவர்களுக்கான மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதுகுறித்து இதில் காண்போம்.

  • Jan 29, 2024, 17:54 PM IST

இந்திய அணியின் (Team India) கேஎல் ராகுல் (KL Rahul), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஆகியோருக்கு முதல் போட்டியில் காயம் ஏற்பட்டதை அடுத்து மூன்று மாற்று வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. அந்த வகையில், ராகுல், ஜடேஜா ஆகியோர் காயம் குறித்த விவரமும், இவர்களுக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட வீரர்கள் குறித்த தகவல்களையும் இதில் முழுமையாக காணலாம்.

 

 

 

 

 

1 /7

IND vs ENG: "இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாள் ஆட்டத்தின் போது ஜடேஜாவுக்கு (Ravindra Jadeja Injury) தொடை தசையில் காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ராகுல் (KL Rahul Injury) வலது கால் வலியால் கடுமையாக துடித்தார்" என பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்தள்ளது.   

2 /7

கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja Ruled Out) ஆகிய இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்  போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்தனர். தற்போது இருவரும் இரண்டாவது போட்டியில் இருந்து மட்டும் விலகி உள்ளனர். 

3 /7

கேஎல் ராகுல் (KL Rahul Ruled Out) முதல் இன்னிங்ஸில் 86 ரன்களை அடித்த நிலையில், ஜடேஜாவும் 87 ரன்களை எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இருவரும் பேட்டிங்கில் சொதப்பினர். ஜடேஜா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். தற்போது இருவருக்குமான மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

4 /7

சர்ஃபராஸ் கான்: ரஞ்சி கோப்பையில் கடந்த சில ஆண்டுகளாக ரன்களை கொத்தாக கொத்தாக குவித்து வந்த வீரர் சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan). நீண்ட காலமாக இவருக்கு வாய்ப்பளிக்கப்படாமல் இருந்ததால், பிசிசிஐ மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் கேஎல் ராகுலின் இடத்தை இவர் நிரப்புவார்.

5 /7

வாஷிங்டன் சுந்தர்: ஜடேஜாவுக்கு மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் காயம் காரணமாக பல டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார். தற்போது அவருக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. பேட்டிங்கிலும் உதவுவார் என்பதால் இவருக்கு அடுத்த போட்டியில் நிச்சயம் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும் எனலாம். 

6 /7

சௌரப் குமார்: 30 வயதான சௌரப் குமார் (Sourabh Kumar) உத்தர பிரதேசத்திற்காக முதல் தர போட்டிகளில் விளையாடி வந்தார். ஆல்ரவுண்டரான இவருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அஸ்வின், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வரிசையில் இருப்பதால் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். மேலும், இந்த போட்டிக்கு மொத்தம் 17 வீரர்களை இந்திய அணி வைத்துள்ளது.  

7 /7

இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு (IND vs ENG Test Series) இதுவரை முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டுமே ஸ்குவாடை அறிவித்தது. விராட் கோலி (Virat Kohli) முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகியதால், அவருக்கு பதில் ராஜத் பட்டீதர் (Rajat Patidar) சேர்க்கப்பட்டார். தற்போது இந்த இரு வீரர்களும் இரண்டாவது போட்டியில் இருந்து மட்டும் விலகியுள்ளனர். அடுத்த போட்டி முதல் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்பும்போது, இந்த வீரர்களில் யார் யாருக்கு அடுத்து வாய்ப்பு கிடைக்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.