ஏசியால் கரண்ட் பில் ஷாக் அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்!

கொளுத்தும் கோடையில் ஏசி இல்லாமல் இருப்பது கடினம். ஆனால், ஏசியை பயன்படுத்தினால் மின் கட்டணம் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் கூடவே ஏற்படுகிறது. ஆனால், முன்பு சில முக்கிய விஷயங்களைக் கவனித்து ஏசி வாங்குவதோடு, பயன்படுத்தும் போதும் சில டிப்ஸ்களை கடைபிடித்தால், உங்களின் கரண்ட் பில் ஷாக் அடிக்காமல் இருக்கும்.

1 /5

ஏசி வாங்கிய பின்னர் நீங்கள் மின்சாரத்தைத் திறமையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த விரும்பினால், முதலில் உங்களுக்கான சரியான ஏர் கண்டிஷனரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக ஸ்டார் மதிப்பீடுகளைக் கொண்ட ஏர் கண்டிஷனர்கள் தான் குறைந்த அளவில் மின்சார சக்தியைப் பயன்படுத்துகின்றது.

2 /5

உங்களின் ஏசியின் வெப்பநிலையை 24°C செட்டிங்கில் வைத்திருப்பது சிறந்தது. உங்கள் ஏசியை 24°C அதிகமாக குளிரும் இல்லாமல், அதே சமயம் வெப்பத்தின் தாக்கமும் இல்லாமல் இருக்கும். இந்த வரம்பிற்குள் ஏசியை இயக்கினால் சுமார் 24 சதவீத மின்சாரம் மிச்சமாகும்.

3 /5

வீட்டின் அறையில் ஏசியை ஆன் செய்யும் போது, ​​அறை சீலிங் ஃபேனையும் ஆன் செய்ய வேண்டும். ஏசி மற்றும் ஃபேனை ஒன்றாக சேர்த்து இயக்கினால் குளிர்ந்த காற்று அறையின் மூலையை வேகமாக சென்றடைகிறது.

4 /5

ஏசியை ஆன் செய்யும் போது, ​​குறிப்பாக படுக்கைக்கு செல்லும் போது கண்டிப்பாக ஏசி டைமரை செட் செய்யவும். இதனால், அறை குளிர்ந்த பிறகு, ஏசி தானாகவே அணைந்து விடும். இதனால் மின்சாரம் மிக அதிகம் சேமிக்கப்படும். எப்போதுமே இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்தும் அவசியம் இருப்பதில்லை. அறை நன்றாக குளிந்தவுடன் ஆஃப் செய்யும் போது, காலை வரை அறை குளிர்ச்சியாகவே இருக்கும்.

5 /5

ஏசியை பயன்படுத்த தொடங்கும் முன் சர்வீஸ் செய்வதும், அதன் பில்டரை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும். ஏர் பில்டர்களில் தூசி சேரும்போதும் அதன் கூலிங் திறன் குறைகிறது. இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கிறது.