Indian Railways: ‘இந்த’ ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு பைசா கூட திரும்ப கிடைக்காது!

தற்போது, ரயிலில் டிக்கெட் முன்பதிவு நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. அதிலும் தொடங்கிய சில நாட்களிலேயே, டிக்கெட் விற்று தீர்ந்து விடுகிறது. அதுவும் விடுமுறை பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அதனால், அவசரமாக பயணம் செய்பவர்களுக்கு அல்லது டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு தட்கல் டிக்கெட் வரப்பிரதமாக உள்ளது என்றால் மிகையில்லை. 

1 /5

ரயில்வே விதிகளின்படி, தட்கல் கோட்டா டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக தான் தொடங்குகிறது. 27ம் தேதி பயணம் செய்ய வேண்டும் என்றால், 26ம் தேதி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.  

2 /5

தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய ரயில்வேயின் எந்த முன்பதிவு கவுண்டருக்கும் செல்ல வேண்டும். நீங்கள் விரும்பினால், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) (IRCTC.CO.IN) இணையதளத்திலிருந்தும் இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். யுடிஎஸ் மற்றும் முன்பதிவு டிக்கெட் கவுன்டர் இருக்கும் சில சிறிய நிலையங்களிலும் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.  

3 /5

தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தை ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து மாற்றி வருகிறது. இந்த வசதி தொடங்கிய போது காலை எட்டு மணிக்கே முன்பதிவு செய்து வந்தது. பின்னர் அதன் நேரம் பகல் 10 மணியாக மாற்றப்பட்டது. இந்த நேரத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, ​​தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரம் ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு வெவ்வேறாக உள்ளது. ஏசி வகுப்பிற்கான தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஏசி அல்லாத வகுப்பு டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

4 /5

ரயில்களுக்கான தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், அதற்கான கட்டணங்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சாதாரண டிக்கெட்டுகளை விட தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ரயில்வே அதிக கட்டணம் வசூலிக்கிறது . ஸ்லீப்பர் வகுப்பிற்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதமும், ஏசிக்கான அடிப்படைக் கட்டணத்தில் 30 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தட்கல் கட்டணத்திற்கு உச்சவரம்பு உள்ளது. ஸ்லீப்பர் வகுப்பில் 100 முதல் 200 ரூபாய், ஏசி சேரில் 125 முதல் 225 ரூபாய், ஏசி3 வகுப்பிற்கு 300 முதல் 400 ரூபாய், ஏசி2ம் வகுப்பிற்கு 400 முதல் 500 ரூபாய். எக்ஸிகியூட்டிவ் நாற்காலி காரில் தட்கல் கட்டணம் ரூ.400 முதல் 500 வரை மட்டுமே.  

5 /5

சாதாரண டிக்கெட்டுகளைப் போலவே தட்கல் டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன. ஆனால் ரத்து தொடர்பான அதன் விதிகள் சற்று வித்தியாசமானது. உங்கள் தட்கல் டிக்கெட் கர்பர்ம் ஆன டிக்கெட் என்றால், அதை ரத்து செய்தால் ஒரு பைசா கூட திரும்பப் பெற முடியாது. உங்கள் தட்கல் டிக்கெட் காத்திருப்புப் பட்டியலில் இருந்தால், வழக்கமான ரத்து விதிகள் அனைத்தும் பொருந்தும்.