ரவியோகம்... அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் சில ராசிகள்!

பிப்ரவரி 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் நிலையில் ப்ரீத்தி யோகம், ரவியோகம், ஆயுஷ்மான் யோகம் போன்ற யோகங்கள் உருவாகின்றன.

பிப்ரவரி 20ஆம் தேதி கிரக நிலைகளின்படி, எந்தெந்த ராசிகளுக்கு இது அதிர்ஷ்டமான நாளாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /6

மேஷ ராசிக்காரர்கள் புதிய வேலை செய்ய திட்டமிட சிறந்த நாளாக இருக்கும். முதலீடுகள் பற்றிய முடிவை எடுக்கலாம். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

2 /6

மிதுன ராசிகளுக்கு உறவினர் மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதிநிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

3 /6

துலாம் ராசிகளுக்கு, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும்.

4 /6

மகர ராசிகளுக்கு பணம் சம்பாதிக்கும் புதிய ஆதாரங்கள் உருவாகலாம். உங்களை சுற்றி உள்ளவர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களுடன் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

5 /6

மீன ராசிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்டபடி வேலையை செய்து முடிப்பீர்கள்.

6 /6

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.