Fenugreek: பலவித நோய்களுக்கு அருமருந்தாகும் வெந்தயம்

இன்றைய கொரோனா காலத்தில், மக்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நமது பொதுவான ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு வெந்தயம் மிகவும் இன்றியமையாதது. நமது வீட்டில் எப்போதும் இருக்கும் ஒரு உணவு பொருள். பலவிதமான நற்குணங்கள் நிறைந்தது. உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் பல வகைகளில் நன்மை பயக்கிறது

1 /5

வெந்தயத்தை பொடி செய்து, தேன் மற்று நெய்யுடன், எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது. சூடான நீருடன் வெந்தயம் தூள் உட்கொள்வது வயிற்று பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

2 /5

வெந்தயத்தை உட்கொள்வதால் கொழுப்பு குறைகிறது. ஆயுர்வேதத்தில் இது குறித்து பல குறிப்புகள் உள்ளன. வெந்தயத்தை உட்கொள்வது நினைவாற்றலையும் மேம்படுத்தும்.

3 /5

வெந்தய கீரை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் வெந்தய கீரை இரைப்பை குடல் நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது, வெந்தய கீரையை சாம்பார் செய்யலாம். 

4 /5

வெந்தய தேநீர் குளிர்காலத்தில் ஏற்படும் சளிக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. வெந்தயத்தை சிறிது தண்ணீரில் கலந்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்

5 /5

உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, முடக்கு வாதம் ஆகியவற்றை வெந்தயம் குணமாக்குகிறது. வெந்தய சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும். குளிர்காலத்தில் வெந்தய கீரை ரொட்டி மிகவும் ருசியாக இருப்பதோடு, உடல நலத்தையும் பாதுகாக்கிறது.