நல்ல காலம் பிறந்தாச்சு! ஓராண்டுக்கு பிறகு நிம்மதி பெருமூச்சு விடும் சிம்மம் மீனம் துலாம் ராசிகள்

Sun And Mangal Conjunction: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டும் விரைவில் இணையவிருக்கின்றன. விருச்சிகத்தில் நிகழும் சூரியன்-செவ்வாய் கூட்டானது 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொன்னான நாட்களைக் கொண்டுவரும், சூரியன் மற்றும் செவ்வாய் அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்

1 /9

கிரகங்களின் பெயர்ச்சியால் பல வகையான தோஷங்களும் யோகங்களும் உருவாகின்றன. இவை, நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிஎன்ற.  இந்த மாதம் சில கிரகங்கள் மாறுகின்றன, அவற்றின் இணைப்பு பலரின் வாழ்வில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவரும். விரைவில், சூரியனும் செவ்வாயும் விருச்சிக ராசியில் இணையப் போகிறார்கள்.  நட்பு கிரகங்களான சூரியனும் செவ்வாயும் நவம்பர் 17ம் தேதியன்று உருவாகும்

2 /9

ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதத்தின்போது நவம்பர் 17ம் நாளன்று சூரியன், விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

3 /9

விருச்சிக ராசியில் நுழையும் சூரியன், ஏற்கனவே அங்கு இருக்கும் செவ்வாயுடன் வீட்டை பகிர்ந்துக் கொள்வதால், வலுவான கிரகங்களான சூரியன் - செவ்வாய் சேர்க்கை நிகழவிருக்கிறது. இது அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் 3 ராசிக்காரர்களுக்கு இந்த நட்பு கிரகங்களின் சேர்க்கை திடீர் நிதி ஆதாயத்தையும் தரும். தொழில், வியாபாரத்திலும் பெரும் முன்னேற்றம் தரும்.

4 /9

சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திடீரென்று பணம் வந்து சேரும். புதிய இடங்களில் இருந்து வரும் பணம் உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். பதவி உயர்வு கிடைப்பதோடு, நற்பெயரும் கூடும். ஊக்கமும் தைரியமும் அதிகரிக்கும். தலைமைப் பொறுப்பை சிறப்பாக வகிக்கும் அளவுக்கு உயர்வீர்கள்  

5 /9

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன், செவ்வாய் சேர்க்கை அனுகூலமான பலன்களைத் தரும். நீண்ட கால மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகளில் இருந்து சற்று நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகளை வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். காதல் உறவுகளில் வெற்றி பெறலாம் அல்லது காதல் உறவு திருமணமாக மாறலாம்.  

6 /9

மீன ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கை பலனளிக்கும். மேற்கொள்ளும் பயணங்கள் பலனளிக்கும். தொழில் சம்பந்தமாக, வேறு சில நிறுவனங்களில் இருந்து சலுகையைப் பெறலாம். சம்பளமும் அதிகரிக்கலாம். முக்கியமான மத அல்லது மங்கள நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். உங்கள் திட்டங்கள் வெற்றியடையும்.   

7 /9

ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சூரிய பகவான் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் தனது ராசியை மாற்றுகிறார்.

8 /9

கார்த்திகையில் விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன், மார்கழி மாதத்தில் பெயர்ந்த பிறகு இந்த பலன்கள் மாறிவிடும்

9 /9

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது