மகா சிவராத்திரி 2024... ராசிகளுக்கு ஏற்ற ‘சில’ எளிய பரிகாரங்கள்!

மகா சிவராத்திரி 2024: மாசி மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி நாளில் வரும் மாசி சிவராத்திரி தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்தால், வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.

மாசி மகா சிவராத்திரி நன்னாளில், வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் வளத்தையும் பெற்று சுகமாக வாழ ராசிக்கு ஏற்ற பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.

1 /12

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். எனவே மேஷ ராசியினர், சிவலிங்கத்திற்கு பால் தயிர், வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

2 /12

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், மகா சிவராத்திரி நன்னாளில் சிவலிங்கத்திற்கு கரும்பு சாற்றில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

3 /12

மிதுன ராசிக்கு அதிபதி புதன் என்பதால், மகர சிவராத்திரி அன்று ஸ்படிக லிங்கத்தை வழிபடுவது பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும்.

4 /12

கடக ராசிக்கு சந்திரன் அதிபதி என்பதால், பாலை கொண்டு அபிஷேகம் செய்து, சந்தனத்தால் அலங்காரம் செய்யலாம்.

5 /12

சிம்ம ராசிக்கு அதிபதி சூரிய பகவான் என்பதால், சிவபெருமானுக்கு பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்வதும், வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வதன் பலன் கிடைக்கும்.

6 /12

கன்னி ராசிக்கு அதிபதி புதன் என்பதால், வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்.

7 /12

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், மகா சிவராத்திரி அன்று, வில்வ இலைகளோடு, ரோஜா அரிசி சந்தனம் போன்றவற்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

8 /12

விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய் என்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு தேன் மற்றும் மெய்யினால் அபிஷேகம் செய்து ஓம் நாகேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

9 /12

தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். எனவே சிவபெருமானுக்கு மஞ்சள் நிற பூக்கள் மற்றும் வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்யவும். சிவ பஞ்சாட்சரத்தை ஜெபிக்கவும்.

10 /12

மகர ராசிக்கு அதிபதி சனி பகவான் என்பதால், சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அர்த்தநாரீஸ்வராய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்

11 /12

கும்ப ராசிக்கு அதிபதி சனி தேவர் என்பதால் மகா சிவராத்திரி அன்று, கருப்பு எள் கலந்த நீரில் அபிஷேகம் செய்து, வில்வ இலை கொண்டு பூஜிக்கவும்.

12 /12

மீன ராசிக்கு அதிபதி குரு பகவான் என்பதால், மஞ்சள் நிற பூக்கள் கொண்டு சிவனை அர்ச்சனை செய்து, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்