ஐபிஎல்-க்கு திரும்பிய கிரிக்கெட் வீரரின் மனைவி - ரசிகர்கள் மகிழ்ச்சி

கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல தொகுப்பாளினி மயாந்தி லாங்கர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளார். 

ஐபிஎல் போட்டியை தொகுத்து வழங்கிய மயாந்தி லாங்கர், ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சையமானவர். 

1 /5

ஐபிஎல் போட்டியில் தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் பிரபலமானவர்கள். அதில் முதன்மையான இடத்தில் இருந்தவர் மயாந்தி லாங்கர். கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிக்கு வராமல் இருந்த அவர், மீண்டும் தன்னுடைய தொகுப்பாளர் பணிக்கு திரும்பியுள்ளார். 

2 /5

மயாந்தி லாங்கர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி ஆவார். ஸ்டூவர்ட் பின்னி மற்றும் மயாந்தி லாங்கர் பல வருடங்கள் காதலித்து 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னியை முதன்முதலில் பேட்டி எடுத்தவர் மயாந்தி  லாங்கர். அப்போது முதல் இருவருக்கும் காதல் மலர்ந்தது. 

3 /5

மயாந்தி லாங்கர் இந்திய விளையாட்டு உலகில் நன்கு அறியப்பட்ட பெயர். கடந்த 15-16 ஆண்டுகளாக, ஒவ்வொரு முக்கிய விளையாட்டு நிகழ்விலும், இந்திய விளையாட்டு சேனல்களின் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 2010 காமன்வெல்த் விளையாட்டு, 2010 FIFA உலகக் கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, IPL உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

4 /5

மயாந்தி லாங்கர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மகள். இவரது தந்தையின் பெயர் லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் லாங்கர். ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றியுள்ளார். மயாந்தி 2006 ஆம் ஆண்டு முதல் விளையாட்டு இதழியல் துறையில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் அமெரிக்காவில் பணிபுரிந்தார். மயாந்தி அமெரிக்காவில் படிக்கும் போது கால்பந்தாட்டத்தை அதிகம் விரும்பினார். 

5 /5

மயாந்தி லாங்கர் குழந்தை பிறந்ததால் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் பங்கேற்க முடியவில்லை. 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளார்.