சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் ஜனவரி மாதம் பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு வந்தார். தற்போது அவர் ஜூன் 17-ம் தேதி கும்ப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி வரை அவர் இந்த நிலையில் இருப்பார்.
சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இந்த பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்: சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். இந்த நேரத்தில், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும். தந்தை மற்றும் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கூடும். குடும்ப வியாபாரம் மற்றும் வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். சுப காரியங்களுக்காக பயணம் செய்ய நேரிடலாம்.
சிம்மம்: இந்த காலத்தில் வேகமான முன்னேற்றம் ஏற்படும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இந்தக் காலகட்டத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். மன மகிழ்ச்சி இருக்கும்.
தனுசு: இந்த காலகட்டத்தில், நீங்கள் பல்வேறு நன்மைகளைப் பெறுவீர்கள். உங்களது பல முக்கியமான பணிகள் முடிவடையும். பணியாளர்கள் சக ஊழியர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பைப் பெறுவார்கள். உங்கள் கடின உழைப்புக்கான பலனையும் பெறுவார்கள். சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மாணவர்களுக்கும் மிகவும் நன்றாக இருக்கும். இக்காலத்தில் கல்வித் துறையில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.
மகரம்: சனி வக்ர பெயர்ச்சியால் உங்கள் நிதி நிலை முன்னேறும். நீங்கள் சொத்துக்களை விற்க நினைத்தால், அதற்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வீட்டுச் சூழல் மிகவும் சிறப்பாக இருக்கும். அதைப் பார்த்து நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, வக்ர சனியின் தாக்கத்தால் வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சனியின் வக்ர பெயர்ச்சி வணிகர்களுக்கு குறிப்பாக பலனளிக்கும். அவர்களின் தொழில் வளர்ச்சி காணும். மொத்தத்தில், சனியின் முழுமையான அருள் இந்த காலத்தில் மீன ராசிக்காரர்கள் மீது இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.