மாத ராசிபலன்: நவம்பர் மாதம் யாருக்கு அனுகூலம்? யாருக்கு ஆபத்து?

நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. பொதுவாக இந்த மாதம் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த மாதம் சில பெரிய கிரகங்களின் மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கன்னி, கடகம் மற்றும் தனுசு உள்ளிட்ட சில ராசிகள் இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகளாக இருக்கும். அதேசமயம் ரிஷபம், மகரம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகள் சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். இந்த மாதம் எந்த ராசிகள் சாதமாக பலன்களை பெறுவகள்? யார் பாதகமான பலன்களை பெறுவார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

1 /6

இந்த மாதம் குரு பகவானின்மாற்றம் நிகழவுள்ளது. இந்த மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிக நல்லதாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் உலகக் கண்ணோட்டத்தை இந்த காலத்தில் விரிவுபடுத்திக்கொள்வார்கள். இதன் காரணமாக வாழ்க்கையைப் பற்றிய முதிர்ந்த மற்றும் அதிக புரிதல் கொண்ட கண்ணோட்டத்தைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் உறவுகல் மேலோங்கும். 

2 /6

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் ஏற்படும் கிரக மாற்றங்கள் அபரிமிதமான நல்ல பலன்களை அள்ளித்தரும். புதிய கலைகளை கற்றுக்கொள்வீர்கள். இதனால் ஆதாயம் அடைவீர்கள். நிதி நிலை மிக நன்றாக இருக்கும்.

3 /6

தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் முதலீடுகளுக்கு ஏற்ற மாதமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுக்ளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

4 /6

ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் செயல்திறன் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படும். பணி இடத்தில் பல சவால்கள் தலைதூக்கும். இந்த காலத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். 

5 /6

இந்த மாதம் மகர ராசிக்காரர்களுக்கு சுய மரியாதை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் பேச்சு எடுபடாமல் மன நிலை அமைதியற்று போகலாம். மிகுந்த பொறுமையுடனும் புரிதலுடனும் செயல்பட வேண்டியது மிக முக்கியமாகும்.

6 /6

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பல வித சவால்கள் நிறைந்த மாதமாக இந்த நவம்பர் மாதம் இருக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். சிறு வாக்குவாதமும் பெரிய சண்டயாகும் சூழல் உருவாகும்.