Astro Prediction: 12 ராசிகளுக்கான செப்டம்பர் மாத பலன்கள்!

செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் ஏற்படப் போகிறது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் மற்றும் புதன் பெயர்ச்சி நடக்கும் நிலையில், எந்த  ராசிக்காரர்களுக்கு  இதனால், அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

1 /12

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறிது கலக்கம் கொடுக்கும் மாதமாக இருக்கும். அதனால்,  பேச்சில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். கல்வித்துறையில் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.  

2 /12

ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்கள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் உடல் நலத்தில் சிறப்பு கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினருடன் தகராறு ஏற்படலாம். எனினும் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள்.

3 /12

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் புதிய சிக்கல்களை சந்தித்தாலும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த நேரத்தில் சிறிது  பயணிக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் முக்கியமான ஒரு நபரை சந்திக்கலாம்.

4 /12

கடகம் - செப்டம்பர் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு சிறிது கடினமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தில் பேச்சில் நிதானம் தேவை. எனினும் மாதத்தின் மத்தியில் முன்னேற்றம் இருக்கும்.

5 /12

சிம்மம் - செப்டம்பர் மாதத்தில் உங்கள் அனைத்து வேலைகளையும்  முறையாக திட்டமிடுங்கள், இல்லையெனில் நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாத தொடக்கத்தில் வீடு, வாகனம் பழுதுபார்ப்பதில் பணம் செலவழிக்க நேரிடும். வேலையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

6 /12

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்wiபர் மாதத்தில் பணிச்சுமை கூடும். மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய மாதமாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான எந்த முடிவையும் கவனமாக எடுங்கள். இந்த மாதம் உங்களது உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

7 /12

துலாம் - செப்டம்பர் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும், சிறப்பையும் தரக்கூடியது. இந்த மாதம் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாத தொடக்கத்தில், நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம்.

8 /12

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், பணம் தொடர்பான விஷயங்களில், கவனமாக முடிவுகளை எடுங்கள்.

9 /12

தனுசு - செப்டம்பர் மாதம் தனுசு ராசிக்காரர்களின் வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும். இந்த மாதம் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு பெரிய சலுகை கிடைக்கும். கூட்டாளியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

10 /12

மகரம் - செப்டம்பர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகம் , பாதகம் இரண்டும் கலந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் மகிழ்ச்சியையும் சில நேரங்களில் சோகத்தையும் அனுபவிக்கலாம். பணிகளில் வெற்றி பெற கூடுதல் முயற்சி செய்ய வேண்டும்.

11 /12

கும்பம் - செப்டம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்த மாதமாக இருக்கும்.. இந்த மாதம் பணியிடத்தில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பணியிடத்தில் முக்கிய பொறுப்பை பெறலாம். அதனால் மரியாதை கூடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

12 /12

மீனம் - மீன ராசிக்காரர்கள் செப்டம்பரில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனினும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் கூடும். கட்டிடம் அல்லது நிலம் காரணமாக உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். மாதத்தின் இரண்டாவது வாரம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.