செப்டம்பர் 2022 மாத ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு நேரம் சரியில்லை, நிதி இழப்பு ஏற்படும்

Monthly Horoscope: செப்டம்பர் மாதத்தில் பல பெரிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் இந்த மாதம் ராசிகளை மாற்றும். இந்த மூன்று கிரகங்களின் மாற்றம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். மாதத்தின் தொடக்கத்தில், செப்டம்பர் 10 ஆம் தேதி, புதன் கன்னியில் பிற்போக்கு நிலையில் இருக்கும். இதற்குப் பிறகு செப்டம்பர் 17ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் அஸ்தமிக்கும். பின்னர் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் பிரவேசிப்பார். இதற்குப் பிறகு மீண்டும் செப்டம்பர் 24ஆம் தேதி கன்னி ராசியில் சுக்கிரன் பிரவேசிப்பார். கிரகங்களின் மாறுதல் பல ராசிகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். செப்டம்பர் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

1 /5

செப்டம்பரில் கிரக நிலைகள் மாறி வரும் நிலையில், வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் முதலில் ஒரு நிபுணரை அணுகவும். இல்லையெனில் சிரமங்கள் ஏற்படலாம். நிதி விஷயங்களிலும், இந்த மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்கள் எங்கும் முதலீடு செய்ய வேண்டாம். இந்த காலகட்டத்தில் செய்த முதலீடுகளால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வது அவசியமானால், ஒரு நிபுணரைத் தொடர்பு கொண்ட பின்னரே செய்யவும்.  

2 /5

துலாம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள் திருப்தி குறைவாக இருப்பார்கள். தொழிலில் தாங்கள் விரும்பும் வெற்றியைக் காண மாட்டார்கள். உங்கள் திருமண வாழ்க்கையிலும் சில சிரமங்கள் இருக்கலாம். உங்கள் துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கும், அது உங்கள் இருவருக்கும் இடையே தகராறுக்கு வழிவகுக்கும். நிதி விஷயத்தில், பணத்தை செலவழிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பணத்தை சிந்தித்து செலவு செய்வது இந்த மாதம் சரியாக இருக்கும். இல்லையெனில், நீங்கள் நிதி சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கூட, இந்த மாதம் உங்களுக்கு சிறப்பு எதையும் காட்டவில்லை. இருப்பினும், உங்களுக்கு எந்த பெரிய பிரச்சனையும் இருக்காது, ஆனால் சிறிய பிரச்சனைகள் இருக்கும்.

3 /5

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் கிரகங்களின் நிலை மாறுவதால் பொருளாதார ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் சற்று கவலையாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். எனவே, மிகுந்த கவனத்துடன் பணத்தை முதலீடு செய்து செலவு செய்வது நன்மை தரும். முடிந்தால், மூத்தவரின் ஆலோசனையைப் பெறுங்கள். இந்த மாதம் சில தேவையற்ற செலவுகள் வரலாம். அதனால் உங்கள் வரவு செலவுக்கு இடையூறு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும், சில சிறு பிரச்சனைகள் உங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும்.

4 /5

செப்டம்பர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சாதகமாக இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தொழிலில் சில சிரமங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும், வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில், இந்த மாதம் சற்று வேதனையாக இருக்கும். யோகா செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது. எனவே தொடர்ந்து யோகா பயிற்சி செய்யுங்கள்.  

5 /5

தனுசு ராசிக்காரர்களுக்குக் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி செப்டம்பர் மாதம் கல்வித்துறையில் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எனவே, மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் விரும்பிய வெற்றியை அடைய முடியும். குடும்ப வாழ்க்கையிலும் மக்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு வரலாம். பிரச்சனையை பொறுமையாக அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.