இன்னும் 48 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆனந்த குபேர பொற்காலம் ஆரம்பம்

Guru Peyarchi 2024: ​​நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழும் குரு பகவான் வருகிற மே 1, 2024 அன்று அதாவது இன்னும் 48 நாட்களில் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே இந்த குரு பெயர்ச்சியால எந்த ராசிகளின் பண வரவு, அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பார்ப்போம்.

Jupiter Transit in 48 Days : நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் விழாயன் இன்னும் 48 நாட்களில் அதாவது மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, தொழில் லாபம் கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.

1 /13

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சிறப்பான பலன் கிடைக்கும். நிதி நிலை மேம்பட்டு வலுவாகும். நிதி ஆதாயமும் உண்டாகும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

2 /13

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் குரு பெயர்ச்சியடைவதால், எல்லா வல்ல நன்மைகளை பெறுவீர்கள். நிதி நிலை மேம்படும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

3 /13

மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் லாபம் மற்றும் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். 

4 /13

கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்பை பெறுவீர்கள். புதிய தொழிலை தொடங்கினால், கட்டாயம் வெற்றியுடன், லாபமும் கிடைக்கலாம். 

5 /13

சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். அதே சமயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.

6 /13

கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை முத்தமிடும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குழந்தை பாக்கியம் பெறலாம். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

7 /13

துலாம் ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த  வேண்டும். அரசியல்வாதிகளுக்கு சில பிரச்சினைகள் வரலாம். இந்த காலக்கட்டத்தில் போராடினால்தான் வெற்றி கிடைக்கும். குல தெய்வத்தை வழிபடுவதன் மூலம் சந்தோஷம் பெறலாம்.  

8 /13

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சியால நல்லருள் கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல சுபமான வரன் அமையும். வாழ்க்கைத் துணையின் இணக்கமான சூழல் இருக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

9 /13

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேரலாம். இந்த குரு பெயர்ச்சியால் மகிழ்ச்சி அலை பல மடங்கு உயரும்.  

10 /13

மகர ராசிக்காரர்களுக்கு முயற்சிகள் நல்ல பலனைத் தரும். எந்த வேலை செய்தாலும் அதில் குடும்பத்தின் நல்லாதரவு கிடைக்கும். துணைவியின் உதவியை பெறுவீர்கள். பண பலன்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் நல்ல சூழல் நிலவும். 

11 /13

கும்பம் ராசிக்காரர்களுக்கு குரு பெயரச்சிக்கு பிறகு மனதில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவி உயர்வு கிடைக்கலாம்.   

12 /13

மீன ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பேசும் வார்த்தையே உங்களுக்கு எதிரானதாக திரும்பிவிடலாம். பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். 

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.