இன்னும் 2 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

Sevvai Peyarchi Palangal : நாளை மறுநாள் அதாவது மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் 12 ராசிகளில் எந்த ராசிக்கு பண வரவு, நிதி ஆதாயம் உண்டாகும் என்பதை பார்ப்போம்.

Kumbam Rasi Sevvai Peyarchi Palangal : செவ்வாய் பகவான் வீரம், தைரியம், வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்பவர் ஆவார். செவ்வாய் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 45 நாட்கள் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில் கிரங்களின் சேனாதிபதி செவ்வாய் பெயர்ச்சி இன்னும் 2 நாட்களில் அதாவது மார்ச் 15,ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 06:22 மணிக்கு, சனியின் திரிகோண ராசியான கும்பத்தை கடக்கப் போகிறார். எனவே இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், பதவி உயர்வு கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.

1 /13

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதானமாக செயல்படவும். பொறுமையுடன் இருக்க முயற்சிக்கவும். கல்விப் பணிகளில் கவனம் தேவை.

2 /13

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் இனிமையான பலன் கிடைக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்க முயற்சிக்கவும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். குழந்தையின் ஆரோக்கியம் மோசமடையலாம்.  

3 /13

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்ற தாழ்வுகள் வரலாம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். அரசாங்கத்தின் ஆதரவையும் பெறலாம்.  

4 /13

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் எதிர்மறையான எண்ணங்கள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.  

5 /13

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் நிறைய நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் உங்களை பாடாய் படுத்தலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். கல்வியில் வெற்றி கிடைக்கும்.  

6 /13

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் மனம் கலங்கலாம். குடும்பத்துடன் மதப் பயணம் மேற்கொள்ளலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கடின உழைப்பு அதிகமாக இருக்கும்.  

7 /13

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனம் அமைதியாக இருக்கும். நம்பிக்கையின்மை ஏற்படலாம். வருமானம் குறைந்து செலவுகள் அதிகரிக்கலாம். நண்பரின் உதவியால் வருமானத்தில் வளர்ச்சியை காண்பீர்கள்.  

8 /13

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் நம்பிக்கை அதிகரிக்கும். அறிவுசார் வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.  

9 /13

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனம் கலங்காமல் மகிழ்ச்சியுடன் இருக்கும். கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். லாப வாய்ப்புகள் பெறலாம். பணியில் மாற்றம் ஏற்படலாம்.  

10 /13

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும், நம்பிக்கையின்மை ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படலாம். தந்தையின் ஆதரவு பெறுவீர்கள். வியாபாரத்தில் சிரமங்கள் ஏற்படலாம்.   

11 /13

கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் தேவையற்ற கோபம், சண்டை ஏற்படலாம். உடல்நலத்தில் விழிப்புடன் இருக்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கல்விப் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம்.  

12 /13

மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் உற்சாகத்தை தவிர்க்கவும். பழைய நண்பருடன் தொடர்பு கொள்ளலாம். மகிழ்ச்சியான பலனை பெறுவீர்கள்.

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.