உயர் கொலஸ்ட்ராலை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும்

Cholesterol Control Tips: அதிக கொலஸ்ட்ரால் அளவு உடல் ஆரோக்கியத்தில் பல வித பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

Cholesterol Control Tips: உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக பல காரணங்கள் உள்ளன. எனினும், நமது சில பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம் இந்த உடல்நலப் பிரச்சினையை சரிசெய்ய முடியும். நமது தினசரி காலைப் பழக்கம் நமது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காலையில் நாம் சாப்பிடும் உணவை பொறுத்து நமது கொலஸ்ட்ரால் அளவில் மாற்றம் ஏற்படலாம். அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு உதவும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

கொலஸ்ட்ரால் அளவு நமது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் காலை வேளைகளில் சில பானங்களை குடித்து அதை கட்டுப்படுத்தலாம். அந்த பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /8

கிரீன் டீயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 2-3 கப் க்ரீன் டீ உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

3 /8

தக்காளியில் லைகோபீன் என்ற கூறு உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆண்டி=ஆக்சிடெண்ட் ஆகும். தக்காளி சாறு குடிப்பது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமின்றி இன்னும் பல நன்மைகளையும் வழங்குகிறது.

4 /8

ஓட்ஸில் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவும் ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்தான பீட்டா-குளுக்கன் நிறைந்துள்ளது. ஓட்ஸ் பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பலம் கொடுப்பதோடு திருப்திகரமான உணர்வையும் அளிக்கின்றது.

5 /8

பாதாமில் வைட்டமின் ஈ, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. பாதாம் பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரத்திற்கு நிறைவான உணர்வையும் அளிக்கின்றது. 

6 /8

ஆரஞ்சுகளில் பெக்டின் எனப்படும் நார்ச்சத்து உள்ளது, இது எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால், கொலஸ்ட்ரால் அளவு குறைவது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் சியும் கிடைக்கின்றது. 

7 /8

சோயாவில் புரதம் அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இது எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவும். சோயா பாலை தினமும் உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த ஒரு நல்ல வழியாக கருதப்படுகின்றது.

8 /8

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.