ஜூலை மாத கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பண வரவு... முழு ராசிபலன் இதோ

Monthly Horoscope, July 2023: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 9 கிரகங்களில் சிலவற்றைத் தவிர, மற்ற அனைத்து கிரகங்களும் ஒவ்வொரு மாதமும் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. 

குரு, சனி மற்றும் ராகு-கேது தவிர, மற்ற அனைத்து கிரகங்களும் அடிக்கடி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பயணிக்கின்றன. கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் சுப, அசுப பலன்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஜூலை மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் எப்போது தங்கள் ராசியை மாற்றும், இதனால் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /11

சந்திரன், சூரியம், செவ்வாய் ராசி மாற்றம்: சந்திரன் சுமார் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றும். சூரியன் ஜூலை 16ம் தேதி கடக ராசிக்கு மாறுகிறார். ஜூலை 01-ம் தேதி, தைரியம் மற்றும் துணிச்சலுக்கு காரணியாக கருதப்படும் செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறார்.

2 /11

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்: ஜூலை மாத கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்

3 /11

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்-ரிஷபம்: திருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்தால் உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடனான உறவுகள் நன்மைகளைத் தரும். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நேரம் இது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

4 /11

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்-மிதுனம்: வியாபாரம் நன்றாக நடக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். சுப மற்றும் சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

5 /11

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்-தனுசு: அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். நிதி ரீதியாகவும் ஸ்திரமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் அதிர்ஷ்ட தெய்வம் கதவைத் தட்ட வாய்ப்புள்ளது.

6 /11

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்-கும்பம்: தடைபட்டிருந்த வேலைகள் இப்போது நடந்து முடியும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். 

7 /11

ஜூலையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்: ஜூலை மாத கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள், மன அமைதியின்மை ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி பார்க்கலாம்.

8 /11

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்-மேஷம்: இவர்களுக்கு எடுத்த காரியத்தில் எல்லாம் தடைகள் ஏற்படும். ஒரு வேலையை முடிக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். மன சோர்வு காணப்படும். 

9 /11

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்-கன்னி: உறவினர்களுடன் மன கசப்பு ஏற்படக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. நம்பிய நண்பர்கள் வேண்டிய நேரத்தில் கைவிடக்கூடும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம்.

10 /11

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்-துலாம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கை, கால்களின் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். அலைச்சல் இருக்கும். பணிகள் முடிய நேரம் எடுக்கும்.

11 /11

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.