துணிவு to லியோ-24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை கடந்த தென்னிந்திய படங்கள்..!

South Indian Most Viewed Trailer: தென்னிந்திய சினிமாவில் அதிக வீயூஸ் பெற்ற ட்ரைலர்கள். 

1 /7

தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர்கள். லிஸ்டில் என்னென்ன படங்கள் உள்ளன தெரியுமா? 

2 /7

ராதே ஷ்யாம்-இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார், பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். இந்த டிரைலரை 24 மணி நேரத்தில் 23.20 மில்லியன் வியூஸ்களுடன் உள்ளது. 

3 /7

சரக்கு வாரி பட்டா-இந்த படத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான படம் இது. இப்படத்தின் டிரைலரை 24 மணி நேரத்தில் 26.77 பேர் பார்த்துள்ளனர். 

4 /7

வாரிசு-இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படம் இது. விஜய், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை வம்சி பைடபள்ளி இயக்கியிருந்தார். வாரிசு படத்தின் டிரைலர், 24 மணி நேரத்தில் 23.10 மில்லியன் வியூஸ்களை கடந்தது. 

5 /7

துணிவு-வாரிசு படத்துடன் சேர்ந்து வெளியான படம், துணிவு. அஜித்குமார், மஞ்சு வாரியர், அமிர், பாவனி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இப்படத்தின் டிரைலர், 24 மணி நேரத்தில் 28 மில்லியன் வியூஸ்களை கடந்தது. 

6 /7

பீஸ்ட்-கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம் இது. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ்களை கடந்தது. 

7 /7

லியோ-விஜய் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் இது. லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். த்ரிஷா, மிஷ்கின், மாத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லியோ படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 31.9 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.