அன்னையர் தினம் வந்தாச்சு..அம்மாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சில சூப்பர் ஐடியாஸ்..

Mother's Day 2024 Gift Ideas : தாய்மார்களை போற்றும் வகையில் உலகம் முழுவதும் வரும் மே 12ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உங்கள் அன்னைக்கு என்ன கிஃப்ட் கொடுக்க வேண்டும் என யோசித்து விட்டீர்களா? 

Mother's Day 2024 Gift Ideas : ‘தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை’ என தமிழ் சினிமாவில் அம்மா செண்டிமண்டை வைத்து மட்டும் பல ஆயிரம் பாடல்களும் படங்களும் வசனங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. இப்படி படங்களில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் தாய் மீது அதிக பாசம் கொண்ட நபர்கள்தான், நம்ம ஊர்காரர்கள். அன்னையர் தினத்தன்று வழக்கமாக, பலர் தங்களது தாய்க்கு ஏதேனும் பரிசு வாங்கி கொடுப்பர். ஆனால், வேலை பளு, பிற யோசனைகள் காரணமாக பலர் தனது தாய்க்கு பரிசு வாங்க மறந்து போயிருப்பர். அவர்களுக்கான கடைசி நிமிட ஐடியாக்கள், இதோ!

1 /7

அன்னையர் தினம், வரும் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உங்கள் அன்னையிடம் உங்கள் வாழ்வில் அவர் எது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதையும் தெரிவிக்கலாம். 

2 /7

உயிரையே உங்களுக்கு கொடுத்த அன்னைக்கு, அன்னையர் தினத்தன்று ஒரு கிஃப்ட் கொடுப்பது பெரிய விஷயமா என்ன? இதற்கான ஐடியாக்களை இங்கு பார்ப்போம். 

3 /7

Lunch Date: உங்கள் அன்னையை அவருக்கு பிடித்த உணவகத்திற்கு அழைத்து சென்று, அவருடன் மதியம் அல்லது இரவு உணவு சாப்பிடலாம். இதனால் நீங்கள் பழைய நினைவுகளை அசைப்போட்டு உங்கள் உறவை வலுப்படுத்திக்கொள்ள முடியும். 

4 /7

Watch: ஒரு சில கிஃப்ட்கள், எத்தனை காலம் ஆனாலும் தொலையாமல் அந்த பந்தம் தொடர்வது போல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது போன்ற ஒரு பரிசுதான் கைகடிகாரம். இதையும் உங்கள் தாய்க்கு வாங்கி கொடுக்கலாம்.

5 /7

Scent:  உங்கள் தாய்க்கு, நல்ல ரிச் நறுமனம் கொண்ட ஒரு செண்ட்-ஐயும் பரிசாக கொடுக்கலாம். பூ போன்ற நறுமனம், பழம் போன்ற நறுமனம் கொண்ட பல வகை வாசனை திரவியங்கள் விற்கப்படுகின்றன. 

6 /7

Power Bank: உங்கள் தாயின் போனில் பேட்டரி தீர்ந்து விட்டால் எழுந்து போக வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவருக்கு பவர் பேங்கை வாங்கித்தரலாம். 

7 /7

நகைகள்: கழுத்துக்கு செயின், கைக்கு மோதிரம், காதுக்கு கம்மல் போன்ற ஆபரணங்களை கூட உங்கள் தாய்க்கு வாங்கி கொடுக்கலாம்.