ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் ரோகித் சர்மாவை இம்பாக்ட் பிளேயராக விளையாட வைக்க ஹர்திக் பாண்டியா திட்டமிட்டுள்ளாராம்.
ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை இரவு (இன்று) 8 மணிக்கு எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். அதேபோல் அவர் கேப்டனாக இருந்து வெளியேறிய குஜராத் டைட்டன்ஸ் அணியை இளம் வீரர் சுப்மான் கில் வழிநடத்த இருக்கிறார்.
இதனால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியாவின் இன்னொரு பிளான் மும்பை ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதில் எந்தவொரு அணியும் பேட்டிங்கின்போது அல்லது பந்துவீச்சின் பந்து இன்னொரு பிளேயருக்கு மாற்றாக மற்றொரு பிளேயரை விளையாட வைக்கலாம்.
அந்த விதிமுறையில் ரோகித் சர்மாவை விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா திட்டமிட்டுள்ளாராம். மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் பேட்டிங் மட்டுமே செய்ய பயன்படுத்தப்பட இருக்கிறார்.
ஏற்கனவே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அந்த அணி நிர்வாகத்தின் மீதும், ஹர்திக் பாண்டியா மீதும் கோபத்தில் இருக்கும் நிலையில், இப்படியொரு முடிவு அந்த அணி எடுத்திருப்பது ரசிகர்களே மேலும் கோபமடைய செய்துள்ளது.
இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், இன்றிரவு நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயராக ஆடுகிறாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரிந்துவிடும்.