புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் புது படங்கள்! எந்த சேனலில் எதை பார்ப்பது?

TV Premieres Tamil : வரும் 2024 புத்தாண்டை ஒட்டி, ஜனவரி 1ஆம் தேதி பல புது தமிழ் படங்கள் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகின்றன. அவை என்னென்ன படங்கள்? எந்தெந்த சேனல்களில் அப்படங்களை பார்க்கலாம்? இதோ முழு விவரம்!

புது வருடம் பிறந்தாலே கொண்டாட்டங்களையும் மகிழ்ச்சியையும் தவிர்க்க முடியாது. அதனுடன் சேர்ந்து புது படங்கள் பார்ப்பதையும் நாம் நிறுத்துவதில்லை. அந்த வகையில் இந்த புத்தாண்டிற்கு ஒளிபரப்பாகும் புது படங்களின் லிஸ்டை பார்ப்போம். 

1 /8

2024 புத்தாண்டை ஒட்டி, பல புது தமிழ் திரைப்படங்கள் வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதையும், அவை ஒளிபரப்பு செய்யப்படும் சேனல்களையும் இங்கு பார்க்கலாம். 

2 /8

சந்தானம் நடிப்பில் வெளியான படம், டிடி ரிட்டன்ஸ். காமெடி-பேய் கதையாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தை வரும் புத்தாண்டு தினத்தன்று, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை 9:30 மணிக்கு பார்க்கலாம். 

3 /8

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த பட்டாஸ் திரைப்படம், சன் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று பிற்பகல் 3 மணிக்கு பார்க்கலாம். 

4 /8

சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படம், சிங்கம். இந்த படத்தை வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம். 

5 /8

யோகி பாபு நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற படம், பேய் மாமா. இந்த படத்தை கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு பார்க்கலாம். 

6 /8

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம், நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை கலைஞர் தொலைக்காட்சியில் காலை 9 மணிக்கு பார்க்கலாம். 

7 /8

த்ரில்லர் பேய் படமான பீட்ஸா 3: தி மம்மி படத்தை கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 1ஆம் தேதியன்று மதியம் 1:30 மணிக்கு பார்க்கலாம். 

8 /8

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படத்தை சன் தொலைக்காட்சியில் மாலை 6:30 மணிக்கு பார்க்கலாம். இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். கங்கணா ரனாவத், ராதிகா, மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.