உடல் எடை அதிகரித்தால் அபாயம்: இந்த நோய்கள் உங்களை பற்றிக்கொள்ளும், ஜாகிரதை

Weight Loss: உடல் பருமன் அதிகரிப்பதால் நாம் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறோம். பலர் அதிக உடல் எடை காரணமாக தன்னம்பிக்கையையும் இழக்கிறார்கள். உடல் ஃபிட்டாக இல்லாமல் பருமனாக இருந்தால், சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதோடு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல நோய்கள் உண்டாக அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதிக எடையுடன் இருப்பது இனப்பெருக்க மற்றும் சுவாச செயல்பாடு முதல் நினைவாற்றல் மற்றும் மனநிலை வரை அனைத்தையும் பாதிக்கிறது. உடல் பருமன் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட பல ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உடல் பருமன் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. உடல் பருமன் அதிகரிப்பது பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

எடையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உடல் பருமன் அபாயத்தைத் தவிர்க்கலாம். பருமனானவர்கள், 5-10 கிலோ எடையை குறைப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் சரியான எடையை அடைய முடியாவிட்டாலும், உடல் பருமனால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கலாம். உடல் பருமன் காரணமாக, எந்த நோய்கள் மக்களுக்கு ஆபத்தை அதிகரிக்கின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

1 /4

உடல் எடை பல இதய நோய்களுக்கான காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. BMI அதிகரிக்கும் போது, ​​இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, இரத்த சர்க்கரை மற்றும் உடல் வீக்கம் அதிகரிக்கிறது. இந்த மாற்றங்கள் கரோனரி இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன.

2 /4

உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்லாது. நிபுணர்களின் கூற்றுப்படி, டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் 80 சதவீதம் பேர் உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கிறார்கள். நீரிழிவு நோய்க்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் இரத்த அழுத்தமும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

3 /4

உடல் பருமன் அதிகமாக இருந்தால் சிறுநீரக செயல்பாடும் பாதிக்கப்படும். சிறுநீரகங்கள் கூடுதல் வேலை செய்ய வேண்டி வரும். சிறுநீரகங்களால் ரத்தத்தைச் சரியாகச் சுத்திகரிக்க முடியாமல் போனால், சிறுநீரகச் செயலிழப்புக்கான அபாயம் அதிகரிக்கும்.

4 /4

உடல் பருமன் ஆஸ்துமா அபாயத்தையும் அதிகரிக்கும். மார்பு மற்றும் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் எடை காரணமாக, நுரையீரல் சுருக்கப்பட்டும். அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் சுவாசிப்பதில் சிரமப்படுகிறார். அதிகப்படியான கொழுப்பு நுரையீரலைத் தூண்டி ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)