பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் : சீனா முதலிடம், ஆஸி இரண்டாவது இடம் - இந்தியா இடம் தெரியுமா?

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சீனா 5 பதக்கங்களை வென்று முதலிடத்தில் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா 4 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சீனா பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவும் பதக்க வேட்டை நடத்துகிறது.

1 /8

எப்போதும் ஒலிம்பிக்கில் சீனாவுடன் போட்டி போட்டு பதக்க வேட்டை நடத்தும் அமெரிக்கா ஆரம்ப கட்டத்தில் பின்தங்கியே இருக்கிறது. 3 தங்கம், 6 வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 

2 /8

விளையாட்டில் உலகில் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸில் தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் போட்டி நடந்து முடிந்து நான்காவது நாட்கள் போட்டி நடைபெற்று வருகின்றன.

3 /8

இதில் வழக்கம்போல் சீனா பதக்க வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் தொடங்கிய மூன்று நாட்களிலேயே அந்நாடு இதுவரை 5 தங்கப்பதங்களை வென்றுள்ளது. அத்துடன் இரண்டு வெண்கலம், இரண்டு வெள்ளி என மொத்தம் 9 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் இருக்கிறது.

4 /8

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. அந்நாடு மொத்தம் 4 தங்கப்பதக்கங்களையும் 3 வெள்ளியையும் கைப்பற்றி இருக்கிறது. 4 தங்கம் வென்றுள்ள ஜப்பான் மற்றும் கொரீயா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

5 /8

கொரீயாவை விட ஒரு வெண்கலம் கூடுதலாக வென்றிருப்பதால் பதக்கப்பட்டியலில் ஜப்பான் மூன்றாவது இடத்திலும், தென்கொரீயா நான்காவது இடத்திலும் இருக்கின்றன.

6 /8

எப்போதும் ஒலிம்பிக்கில் சீனாவுடன் போட்டி போட்டு பதக்க வேட்டை நடத்தும் அமெரிக்கா ஆரம்ப கட்டத்தில் பின்தங்கியே இருக்கிறது. 3 தங்கம், 6 வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 

7 /8

பிரான்ஸ் 3 தங்கங்களுடன் 6வது இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி தலா இரண்டு தங்கப்பதக்கங்களுடன் ஏழாவது, எட்டாவது இடத்தில் இருக்கின்றன. இத்தாலி, கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், பெல்ஜியம், ஹாங்காங் ஆகியவை முறையே தலா ஒரு தங்கப்பதங்களை வென்றுள்ளன.

8 /8

இந்தப் பட்டியலில் இந்தியா ஒரு வெண்கலம் வென்று 23வது இடத்தில் இருக்கிறது. ஸ்விட்சர்லாந்து ஒரு வெண்கலம் வென்று, ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பதக்கம் வென்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.