Pensioners Alert: ஓய்வூதியம் தடை இல்லாமல் கிடைக்க இதை கண்டிப்பாக செய்யவும்

Pensioners Alert: புதிய விதிகளின்படி, ஓய்வூதியம் பெறுவோர் இந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவோர் இதைச் செய்யாவிட்டால், அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும். வாழ்க்கைச் சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பித்தால், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து பெறப்படும். 

 

1 /4

ஓய்வுபெற்றவர்கள் வாழ்க்கைச் சான்றிதழை தாங்களே எளிய முறையில் சமர்ப்பிக்கலாம். இதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/ என்ற இணைப்புக்கு செல்ல வேண்டும். இங்கே பயோமெட்ரிக் மற்றும் அங்கீகாரம் மூலம் வாழ்க்கைச் சான்றிதழை உருவாக்கலாம். இதற்குப் பிறகு, ஸ்மார்ட்ஃபோன் மூலம் மின்னஞ்சல் ஐடி மற்றும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி வீட்டில் அமர்ந்தபடியே வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.  

2 /4

ஓய்வூதியம் பெறுவோர் 12 பொதுத்துறை வங்கிகளின் டோர் ஸ்டெப் பாங்கிங் கூட்டணி அல்லது அஞ்சல் துறையின் டோர் ஸ்டெப் பாங்கிங் சேவையைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை தெரிவித்துள்ளது.   

3 /4

எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 12 வங்கிகளில் இந்த வசதியைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோர் ஸ்டெப் வசதிக்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.  

4 /4

இதுமட்டுமின்றி, ஓய்வூதியம் பெறுவோர் அந்தந்த கிளைக்குச் சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். இது தவிர, மத்திய அலுவலகத்திற்குச் சென்று நேரடியாகவும் வாழ்க்கைச் சான்றிதழையும் சமர்ப்பிக்கலாம்.