Multani Mitti Side Effects: முல்தானி மிட்டி சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை கொடுக்கிறது. ஆனால் இதனை தவறான முறையில் பயன்படுத்தினால் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சருமம் பளபளப்பாக இருக்க பலரும் பலவிதமான தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். வீட்டு வைத்தியம் முதல் கடைகளில் விற்கப்படும் கிரீம்கள் வரை பலவற்றை பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் உங்கள் சருமத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அப்போதும் தான் உங்கள் சருமம் நன்றாக இருக்கும், இல்லை என்றால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
வீட்டு வைத்தியமாக இருந்தாலும் உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்றவாறு பொருட்களை பயன்படுத்த வேண்டும். சிலர் முல்தானி மிட்டியை சரும பளபளப்பிற்காக பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தோல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் முல்தானி மிட்டி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அதே போல லேசான சருமம் உள்ளவர்கள் முல்தானி மிட்டி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி பயன்படுத்தினால் முகத்தில் பருக்கள் அல்லது பொலிவு போன்ற பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்புள்ளது.
வறண்ட சருமம் கொண்டவர்கள் முல்தானி மிட்டி பயன்படுத்த வேண்டாம். இதன் காரணமாக சருமத்தில் சொறி அல்லது மந்தமான தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.