நவம்பர் மாத பெயர்ச்சிகளால் பம்பர் பலன்களை பெறும் ‘4’ ராசிகள்!

நவம்பர் மாதம் 3 கிரகங்கள் விருச்சிக ராசியில் பிரவேசிக்க உள்ளன. நவம்பர் 11-ம் தேதி விருச்சிக ராசியில் சுக்கிரன் கிரகமும், நவம்பர் 13-ம் தேதி, கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம், நவம்பர் 16-ம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரிய கிரகம் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கவுள்ளது. 

1 /5

நவம்பர் மாதம் 3 கிரகங்கள் விருச்சிக ராசியில் பிரவேசிக்க உள்ளன. நவம்பர் 11-ம் தேதி விருச்சிக ராசியில் சுக்கிரன் கிரகமும், நவம்பர் 13-ம் தேதி, கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம், நவம்பர் 16-ம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரிய கிரகம் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கவுள்ளது. விருச்சிக ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் இணைந்து வருவதால், 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொல்லைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.

2 /5

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் திடீர் சுபச் செய்தி கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கலாம். வியாபாரத்தில் புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் திடீரென்று திரும்பக் கிடைக்கும்.

3 /5

கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலைகளைத் தொடங்குவது நன்மை தரும். வேலை-வியாபாரத்தில் பதவி உயர்வு அல்லது பணப் பலன்கள் கிடைக்கும். கல்வித் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி காலம் வரப்பிரசாதமாக அமையும். தொழிலில் முன்னேற பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு அதிகம்.

4 /5

விருச்சிகம்: மூன்று முக்கிய கிரகங்களும் விருச்சிக ராசியில் இணையப் போவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன் கிடைக்கும். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயங்களையும் வெற்றிக்ளையும் பெறுவார்கள். முதலீட்டுக்கான புதிய வழிகள் திறக்கப்படும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமை இருக்கும். திருமண உறவுகளில் மகிழ்ச்சி அடைவீர்கள்.  

5 /5

மீனம் : இந்த ராசிக்காரர்கள் ராசி மாற்றத்தால் மிகுந்த லாபம் பெறலாம். எந்தவொரு சொத்து பரிவர்த்தனைக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க புதிய ஆதாரங்களைப் பெறுவீர்கள். சூரியனின் சஞ்சாரத்தின் போது உங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.