ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள் இதோ!

PM Modi Rameshwaram Visit: தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். அவரின் ராமேஸ்வரம் பயணம் குறித்து இங்கு காணலாம்.

  • Jan 20, 2024, 20:25 PM IST
1 /8

PM Modi Rameswaram Visit Photos: பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். 

2 /8

முன்னதாக, அவர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடினார். அதுவரை பொதுமக்களுக்கு அங்கு நீராட அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

3 /8

அதன்பின்னர், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடினார். மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித தீர்த்தத்தை எடுத்துச் செல்ல உள்ளார்.   

4 /8

ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனத்தை செய்ததை முன்னிட்டு கோவிலில் இன்று யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.  

5 /8

பிரதமர் மோடி இன்று இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். முன்னதாக, ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்த பிரதமர், ஹெலிகாப்டர் மூலமாகவே ராமேஸ்வரம் வந்தடைந்தார்.  

6 /8

நாளை காலை பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இருந்து கார் மூலம் தனுஷ்கோடி செல்ல இருக்கிறார். அங்கு கோதண்டராமசுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டு, ராமர் பாலம் பகுதியை பார்வையிடுகிறார்.   

7 /8

பின்னர், நாளை மதுரைக்கு ஹெலிகாப்டரில் செல்லும் அவர் சிறப்பு விமானம் மூலம் அயோத்தி புறப்படுகிறார். அதாவது, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிரதமர் மோடி நேரடியாக தமிழகத்தில் இருந்து செல்கிறார்.    

8 /8

மூன்று நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடரை நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிவைத்தார்.