Healthy Juices: குழந்தையின் புத்தியை ஷார்ப் ஆக்கும் ஜூஸ்கள்! வளரும் குழந்தையின் ஆரோக்கிய ரகசியம்!

Juices For Kids Health: வளரும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து இருந்தால் தான் அவர்களுக்கு நோய்நொடிகள் ஏற்படாது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் உண்ணும் உணவு அடிப்படையாகிறது

உடல் வளர்ச்சி மட்டுமல்ல, மூளை வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம்... ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களையும் எப்படி சாப்பிட்டால் நல்லது என்பதை தெரிந்து உண்பது பலன் தரும்... 

1 /8

பழங்கள் நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு தினசரி பழங்களை கொடுக்க வேண்டும். ஆனால், சாப்பிடுவதற்கு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு எப்படி பழம் கொடுப்பது? ஜூஸாக கொடுத்தால் ஊட்டம் கிடைத்துவிடும்

2 /8

ஆரஞ்சு பழத்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதைவிட, அதன் ஜூஸ் கொடுத்தால் விரும்பிக் குடிப்பார்கள். விட்டமின் சி சத்து கொண்ட ஆரஞ்சு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

3 /8

குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியுடன் உடலில் ரத்த விருத்திக்கும் பீட்ரூட் ஜூஸ் முக்கியமானது

4 /8

சில பழங்களை ஒன்றாக சேர்த்து ஜூஸ் செய்தால் ஊட்டச்சத்துக்கள் கூடும். அந்த வகையில் கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து செய்யும் ஜூஸ் இரு மடங்கு சத்துக்களைக் கொடுக்கும்

5 /8

பழங்களைவிட பழரசம் குழந்தைகளுக்கு நல்லது என்பதற்கான காரணம், அது உள் செல்லும் அளவு தான்.

6 /8

பல்வேறு நன்மைகளை வழங்கும் கேரட்டை குழந்தைகள் நேரடியாக சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு கேரட் ஜூஸில் எலுமிச்சை சேர்த்துக் கொடுத்தால், வளர்ச்சி துரிதப்படும்

7 /8

பழமாக கொடுத்தாலும் சரி, இல்லை ஜூஸாக கொடுத்தாலும் சரி, ஊட்டச்சத்துக்களை ஊக்கப்படுத்தும் ஸ்ட்ராபெர்ரி குழந்தைகளுக்கு அவசியமானது

8 /8

பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை