Purattasi Sani Maavillakku : திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு தீபம் ஏற்றி வணங்குவது பெரும் புண்ணியம் ஆகும்...
அரிசி மாவால் மாவிளக்கு செய்து அதில் நெய்விட்டு தீபமேற்றி பெருமாளை வழிபட்டால் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். அதனால், புரட்டாசி சனியில் ஏழுமலையானுக்கு மாவிளக்கு போடுவது வழக்கம்
பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதற்கு என சில விதிமுறைகளும் உள்ளன. திருப்பதியில் கொடியேற்றம் ஆன பிறகு வீடுகளில் மாவிளக்கு ஏற்ற கூடாது
இந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி துவங்கி, அக்டோபர் 12 வரை திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது.
அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை திருப்பதியில் தேரோட்டமும், அக்டோபர் 12ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.
அக்டோபர் 12 புரட்டாசி சனிக்கிழமை திருவோண நட்சத்திரம் அன்று மாவிளக்கு போடுவது உகந்தது.
அக்டோபர் 12 புரட்டாசி கடைசி சனிக்கிழமையாக இருப்பதுடன் தீர்த்தவாரியும் முடிவடைவதால், அன்று மாவிளக்கு போடலாம்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரத்துடனும், அம்பிகைக்குரிய விஜயதசமி திருநாளுடனும் இணைந்து வருகிறது. இந்த நாளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது
புரட்டாசி கடைசி சனிக்கிழமை பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரத்துடனும், அம்பிகைக்குரிய விஜயதசமி திருநாளுடனும் இணைந்து வருகிறது. இந்த நாளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது