ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2024 ஆரம்பமே அதிரடி... ராஜயோகம்

Rahu Ketu Nakshatra Transit: புத்தாண்டின் துவக்கத்திலேயே நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ராகு ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலும் கேது சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்திலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். 

ராகு மற்றும் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இந்த மாற்றம் மிகப்பெரிய அளவில் நற்பலன்களை அள்ளித்தரும். ராகு கேது நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்படவுள்ள விளைவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /13

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகுவும் கேதுவும் ஏழாவது வீட்டில் இருப்பார்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தால், இப்போது நிலைமை சீராகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிச்சயமாக நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். உங்கள் திருமணத்தில் தாமதம் அல்லது தடைகள் இருந்திருந்தால், நிச்சயமாக இப்போது அவை நீங்கும், திருமணம் நிச்சயமாகும். 

2 /13

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் ராகுவும் கேதுவும் அமைவதால் வெளிநாடு செல்வதற்கான வழி பிறக்கும். கிரக நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். போட்டித் தேர்வுகள் மற்றும் பிற துறைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். 

3 /13

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் காதல் உறவுகளில் பிரச்சனைகளை உருவாகலாம்.  மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். ஆக்கப்பூர்வமான துறைகளில் பணிபுரிபவர்கள், குறிப்பாக வெப் டிசைனிங் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் வெற்றி பெறலாம். பிள்ளைகளால் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.

4 /13

கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில், ராகு மற்றும் கேது தாய்க்கு தொல்லைகளை ஏற்படுத்தும். உங்கள் தாயாரின் உடல்நிலை மோசமடையலாம் ஆனால் நான்காம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் நீங்கள் அதிக எதிர்மறை தாக்கத்தை உணர மாட்டீர்கள். நான்காவது வீட்டில் உள்ள கேது உங்கள் வீட்டின் சூழலையும் விரும்பத்தகாததாக மாற்றும்.

5 /13

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகுவும் கேதுவும் இந்த காலத்தில் அபரிமிதமான தைரியத்தைத் தருவார்கள். இருப்பினும், இது உங்களுக்கும் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்கலாம். இதன் காரணமாக உங்கள் அன்புக்குரியவர்களுடனான உங்கள் தொடர்பு துண்டிக்கப்படலாம். 

6 /13

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி பேச்சாற்றலை பாதிக்கலாம். உங்கள் பேச்சால், உங்கள் நோக்கத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும். இந்த பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக வருவாயில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். இருப்பினும், நீங்கள் சரியான திசையில் நடவடிக்கை எடுத்தால் விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.

7 /13

துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். துலாம் ராசிக்காரர்களை இந்த பெயர்ச்சி ஆராய்ச்சி சார்ந்தவர்களாகவும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் மாற்றும். அவர்கள் நேர்மையான மற்றும் யதார்த்தமான மதிப்பீடுகள் மற்றும் முடிவுகளை எடுப்பார்கள். சுக்கிரனால் ஆளப்படும் அவர்கள் எப்பொழுதும் எந்த பிரச்சனைக்கும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை கொண்டு வருவார்கள். 

8 /13

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவுடன் மற்ற கிரகங்களின் நிலைகளும் சாதகமாக இருந்தால், இந்த காலத்தில் ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். இந்த காலத்தில் வெளிநாடு செல்வதற்கு அல்லது வெளிநாட்டில் இருந்து லாபம் ஈட்டுவதற்கு வழி திறக்கும். சுக்கிரன் அல்லது புதனின் நிலை பாதகமாக இருந்தால் வெளிநாட்டு வேலைகளால் நஷ்டமும் ஏற்படலாம். ஆகையால் கவனமாக இருப்பது நல்லது.

9 /13

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகுவும் கேதுவும் பொருளாதார பலன்களைத் தருவார்கள். இந்த காலகட்டத்தில் ராகு மற்றும் கேது நிதி விஷயங்களில் உங்களுக்கு முழு ஆதரவை வழங்குவார்கள். இந்த ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் ஏராளமான செல்வங்களைக் குவிப்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் கடின உழைப்பால் பல வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்கள் வங்கி இருப்பும் நன்றாக இருக்கும்.

10 /13

மகர ராசிக்காரர்கள் இந்த காலத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். தந்தையுடன் சில விஷயங்களில் தகராறு அல்லது பிரச்சனை வரலாம். மேலும், இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் வெற்றி பெற கடுமையாக உழைப்பார்கள். ஆனால், முன்னேற்றம் அடைய பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய மனக் கவலைகள் இருக்கலாம். ஆனால், விரைவில் இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்கவும், தொழிலில் வெற்றி பெறவும் முயற்சி செய்வார்கள்.

11 /13

கும்ப ராசிக்காரர்கள் ஆரோக்கியமாகவும், அச்சமற்றவர்களாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் இப்போது தங்கள் வியாபாரத்தை முன்னேற்ற கடினமாக உழைப்பார்கள். தொழிலிலும் முன்னேற்றம் அடைவீர்கள். 

12 /13

மீன ராசிக்காரர்களுக்கு ராகு, கேதுவின் சஞ்சாரம் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை கொடுக்கலாம். அதுமட்டுமின்றி கேதுவும் அவ்வப்போது பிரச்சனைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். இந்தக் காலகட்டத்தில் வாகனத்தை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் மோசமான நிலையில் இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகல்களை உறுதிப்படுத்தவில்லை.