தமிழகத்திற்கு முன் மற்ற மாநிலங்களில் வெளியாகும் ஜெயிலர்? சோகத்தில் ரசிகர்கள்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'ஜெயிலர்' ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வர உள்ளது.

 

1 /5

ஜெய்லர் ட்ரெய்லர் "ஜெயிலர் ஷோகேஸ்" என்று கூறப்படும் ட்ரைலர் ஆகஸ்ட் 2-ம் தேதி இன்று வெளியாக உள்ளது. பொதுவாக டாப் ஹீரோக்களின் படங்களில் அதிகாலை 5 மணி காட்சிகள் இருக்கும்.   

2 /5

ஆனால் தமிழக அரசின் புதிய கொள்கைப்படி திரையரங்குகள் காலை 9 மணிக்கு மட்டுமே தொடங்கும். மறுபுறம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் காலை 6 மணிக்கு தொடங்கும், அமெரிக்காவிலும் நேரத்துடன் ஒத்துப்போகும்.   

3 /5

இந்த செய்தி வெளியானதில் இருந்து தலைவரின் ரசிகர்கள் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை விட நேரம் தாமதமாக படத்தை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.   

4 /5

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படம் வெளிவர இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் உள்ள நிலையில், தமிழகத்தில் அதிகாலை திரையிட அனுமதி கிடைக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.  

5 /5

'ஜெயிலர்' படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.