Lal Salaam Box Office: ஒரே நாளில் இத்தனை கோடியா! லால் சலாம் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன்!

Lal Salaam Movie Box Office Collection: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் என்ன தெரியுமா? 

Rajinikanth Vishnu Vishal Vikranth Starrer Lal Salaam Movie Box Office Collection: ரசிகர்களை சமீப காலமாக அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய படம், லால் சலாம். இந்த படத்தில், நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், நேற்று வெளியான நிலையில் இதன் ஒரு நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

1 /7

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், லால் சலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். படம், நேற்று (பிப்ரவரி 9) வெளியானது. 

2 /7

லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள், இதில் கிரிக்கெட் வீரர்களாக வருகின்றனர். 

3 /7

லால் சலாம் படம், விளையாட்டு போட்டியில் கலந்திருக்கும் மத அரசியல் குறித்து பேசியுள்ளது. மத அரசியலுக்கு எதிரான வசனங்களையும் இப்படம் கொண்டுள்ளது. 

4 /7

ரஜினிகாந்துடன் இணைந்து செந்தில், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் கேமியோ பாத்திரத்தில் வருகிறார். 

5 /7

லால் சலாம் படம், மொத்தம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த படம், முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? 

6 /7

லால் சலாம் படம், ரிலீஸான முதல் நாளில் மொத்தமாக உலகளவில் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

7 /7

இப்படம், தமிழ் நாட்டில் மட்டும் ரூ.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.