சகல செல்வங்களையும் அள்ளித் தரும் ஐப்பசி மாத ராம ஏகாதசி விரதம் இருந்தால் என்ன நன்மை?

Get Rid Of Sins Via Ekadasi Vrat: தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன் வரும்  ராம ஏகாதசி தினத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம்... யாரெல்லாம் இந்த விரதத்தை இருக்கக்கூடாது? தெரிந்துக் கொள்ளுங்கள்

1 /8

ஐப்பசி மாத தேய்பிறையில் வரும் ரமா அல்லது ராம ஏகாதசி ஆகும்.தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்னதாக வரும் ரமா ஏகாதசியின் பெருமைகள் பற்றி பிரம்ம-வைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  

2 /8

ஒருவரின் அனைத்து பாவங்களையும் அழித்து விடும் ரமா ஏகாதசியின் பெருமைகளை கதையாக சொல்வதும் கேட்பதும் மிகவும் விசேஷமானது

3 /8

இந்த விரதம் இருப்பதன் மூலம் அனைத்து பாவங்களும் நீங்கும். லட்சுமி தேவியின் ஆசியுடன் வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியை சந்திக்க மாட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது. ராம ஏகாதசி 9 நவம்பர் 2023 வியாழன் அன்று வருகிறது. ராம ஏகாதசி திதி நவம்பர் 8, 2023 அன்று காலை 08:23 மணிக்கு தொடங்கி நவம்பர் 9, 2023 அன்று காலை 10:41 மணி வரை தொடர்கிறது

4 /8

ஏகாதசி விரதத்தை முறையுடன் கடைபிடிக்கும் முசுகுண்டா என்ற அரசரின் ராஜ்ஜியத்தில், ஏகாதசியன்று யானைகள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கே ஏகாதசியன்று உணவு கிடையாது. ஆனால், அரசரின் மருமகன் சோபனா பசி பொறுக்காதவர். அவர் மாமனாரின் வீட்டிற்கு வந்தபோது ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க முடிவு செய்தார்

5 /8

நாட்டு மக்கள் அனைவரும் விஷ்ணுவின் புனித நாமத்தை உச்சரித்து இரவு பொழுதை கழித்த நிலையில், பசி தாங்க முடியாத சோபானா உயிரிழந்துவிட்டார். மன்னர் முசுகுண்டாவே மருமகனுக்கு இறுதி சடங்குகள் செய்தார். கணவன் சோபானனின் மறைவிற்கு பிறகு மனைவி சந்திரபாகா தந்தையுடனேயே தங்கிவிட்டார்

6 /8

ரமா ஏகாதசி அனுஷ்டித்ததன் பலனாக சோபனா, மந்தார மலை உச்சியில் உள்ள தேவபுரம் என்ற நகரின் மன்னராகி, செல்வ செழிப்புடன் வாழ்ந்தான். கந்தர்வர்களும், அப்சராக்களும் அவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர். தீர்த்த யாத்திரை சென்ற சோமசர்மா என்ற அந்தணர், சோபனாவை அடையாளம் கண்டு நலம் விசாரித்தார். சோபனாவும் தனது மனைவி, உறவுகள் பற்றி விசாரித்தார். ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்ததால் தனக்கு இந்த அரசு கிடைத்ததாகவும், ஆனால் விருப்பம் இல்லாமல் விரதம் இருந்ததால் இது நிலையற்ற ராஜ்யமாக உள்ளதாகவும், தனது மனைவியால் மட்டுமே இதை நிலையான ராஜ்யம் ஆக்க முடியும் என்று சோபனா தெரிவித்தார்

7 /8

நாட்டிற்கு திரும்பிய சோமசர்மா சந்திரபாகாவிடம் நடந்தவற்றை சொன்னதும், கணவரிடம் செல்ல விரும்பிய சந்திரபாகா வாமதேவர் முனிவரிடம் மந்திர உபதேசம் பெற்று ஆன்மீக உடலைப் பெற்று தனது புண்ணியத்தால் கணவரின் ராஜ்யத்தை நிலையானதாக மாற்றினாள். பிறகு தெய்வீக உடலுடன் தனது கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள் சந்திரபாகா.

8 /8

இந்த விரதத்தை கடைபிடித்தால் கொலை செய்த பாவத்திலிருந்தும் முக்தி கிடைக்கும். இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பவர்களின் பாவங்களும்ம் அகன்று, விஷ்ணுவின் பரமத்தில் ஆனந்தமாக வாழ்வார்கள்