உதயமாகிறார் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... பண வரவு, லாபம் அதிகரிக்கும்

Shani Uday: ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். முக்கியமான கிராமமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் அவர் இருக்கிறார்.

Shani Uday: சுமார் இரண்டரை ஆண்டு காலம் அவர் ஒரு ராசியிலேயே இருக்கிறார். அதிக காலத்திற்கு அவர் ஒரே ராசியில் இருப்பதால் அவரால் ஏற்படும் தாக்கங்களும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றன. பிப்ரவரி 11-ம் தேதி கும்ப ராசியில் சனி அஸ்தமனமானார். மார்ச் 18 ஆம் தேதி அவர் கும்பத்திலேயே உதயமாக உள்ளார். சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் அடுத்த பத்து மாதங்கள் மிகவும் லாபகரமானதாக இருக்கும். 2025 ஆம் ஆண்டிலும் இந்த தாக்கத்தின் பலன்களை இவர்கள் அனுபவிப்பார்கள். சனி உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /10

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளையும் நிலைகளையும் மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. சனியின் ராசி மாற்றம் நட்சத்திர மாற்றம், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதய, அஸ்தமன நிலைகள் என்று அனைத்து மாற்றங்களும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றன.  

2 /10

நீதியின் கடவுளான சனி பகவான் இன்னும் சில நாட்களின் உதயமாகவுள்ளார். அவர் தற்போது அஸ்தமன நிலையில் இருக்கிறார். பொதுவாகவே கிரகங்களின் உதயம் சுபமானதாக கருதப்படுகின்றது. 

3 /10

கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் இருப்பார். பிப்ரவரி 11-ம் தேதி கும்ப ராசியில் சனி அஸ்தமனமானார். மார்ச் 18 ஆம் தேதி அவர் கும்பத்திலேயே உதயமாக உள்ளார். 

4 /10

சனி பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அடுத்த பத்து மாதங்கள் மிகவும் லாபகரமானதாக இருக்கும். இவர்கள் வெற்றியின் உச்சத்தை தொடுவார்கள். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

5 /10

சனி உதயத்தால் அடுத்த 10 மாதங்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சனியின் அருளால் வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய நட்புகள் உருவாகும்.

6 /10

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் லாபகரமானதாக இருக்கும். வாழ்வில்  முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

7 /10

துலா ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் பொருளாதார ரீதியாக பல நன்மைகளை அளிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீட்டிக் உறவினர்களின் வருகை இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.  

8 /10

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி உதயம் லாபகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் இப்பொழுது முதலீடுகளை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பயணம் சென்று வருவீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

9 /10

சனி உதயம் தனுசு ராசிக்காரர்களுக்கு சுபமாக கருதப்படுகின்றது. கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள் புதிய திட்டங்களை இப்போது உருவாக்கினால் அதில் வெற்றி காணலாம். அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்

10 /10

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.