ரிஷப் பந்தின் சகோதரியா இவர்... பிறந்தநாள் புகைப்படங்கள்!

ரிஷப் பந்த் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவரது குடும்பம் முழு ஆதரவு அளித்து வருகிறது. அதில், அவரது சகோதரி சாக்ஷி பந்த் மிகவும் முக்கியமானவர். சாக்ஷி பந்த், நேற்று (செப்டம்பர் 24) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரிஷப் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சகோதரியின் புகைப்படங்களை பதிவிட்டு  தனது வாழ்த்துகளை தெரிவித்தார். சாக்ஷி பந்த் குறித்து சில அறியப்படாத தகவல்கள். இதோ...

  • Sep 25, 2022, 20:02 PM IST
1 /5

சாக்ஷி பந்த் 1995ஆம் ஆண்டு, செப்.24ஆம் தேதி பிறந்தார். இவர் ரிஷப் பந்தை விட இரண்டு வயது மூத்தவர். 

2 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

3 /5

இவர் தற்போது இங்கிலாந்தில் படித்து வருகிறார். முன்னதாக, டேராடூனில் உள்ள டூன் கல்லூரியில் படித்தார். 

4 /5

சாக்ஷிக்கு பயணம் என்றால் மிகவும் விருப்பம். தொடர்ந்து, பயணம் செய்யும் அவர், பயணத்தின் போது எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிடுவார். 

5 /5

பெரும்பாலும், சாக்ஷி தனது சகோதரர் ரிஷப் பந்த் உடனும், குடும்பத்தினருடனும் தான் புகைப்படங்களை பதிவிடுவார். ரிஷப் பந்திற்கு ராக்கி கட்டும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் காண கிடைக்கும். அதில், ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷபந்தன் அன்று ரிஷப் தனது வீட்டிற்கு வந்துவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.