Royal Enfield Shotgun: பவர் இன்ஜின் உடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் புதிய பைக்

Royal Enfield Shotgun புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் தோற்றத்திலும் வடிவமைப்பிலும் மிகவும் பிரமிக்க வைக்கிறது. 

 

1 /10

நாட்டின் முன்னணி பெர்ஃபார்மென்ஸ் பைக் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு தனது புதிய பைக் ஷாட்கன் 650 இன் மோட்டோவர்ஸ் பதிப்பை லேட்டஸ்டாக அறிமுகப்படுத்தியுள்ளது.    

2 /10

மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்த பைக் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும். மோட்டோவர்ஸ் எடிஷனுக்கும் இந்த புதிய வழக்கமான மாடலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் பெயிண்ட் வேலை. இது தவிர என்ஜின் மெக்கானிசம் போன்றவை ஒரே மாதிரியாக இருக்கும்.  

3 /10

650 cc பிளாட்ஃபார்மில் கட்டப்பட்ட, புதிய ஷாட்கன் இன்டர்செப்டர் 650, கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் சூப்பர் மீடியோர் 650 வரிசையில் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் இணைந்துள்ளது. இதன் மூலம், இது 650 சிசி பிரிவில் நிறுவனத்தின் நான்காவது மாடலாக மாறியுள்ளது.   

4 /10

சில விஷயங்களில் Shotgun 650 மற்றும் Super Meteor 650 ஆகியவற்றுக்கு இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும், பைக்குகள் மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறது. 2021 ஆம் ஆண்டு EICMA மோட்டார் ஷோவின் போது நிறுவனம் இந்த பைக்கை 'SG65' என்ற பெயரில் ஒரு கான்செப்டாக வழங்கியது.   

5 /10

இதை டபுள் சீட்டராகவும் மாற்ற முடியும். இதில் நீக்கக்கூடிய பைலான் ரைடர் இருக்கை உள்ளது. 240 கிலோ எடை கொண்டது ஷாட்கன் 650. இருக்கை உயரம் 740 mm, அதேசமயம் Shotgun இல் இருக்கை உயரம் 795 mm ஆகும். ஷாட்கன் 650-ல், நிறுவனம் டூயல் 648 சிசி எஞ்சினைப் பயன்படுத்தியுள்ளது.  

6 /10

இது 47 ஹெச்பி ஆற்றலையும் 52.3 என்எம் முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஷேவா அப்-சைடு-டவுன் (USD) ஃபோர்க் சஸ்பென்ஷன் முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் முன் ஏற்றப்பட்ட அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டூயல் ஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.  

7 /10

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், டிரிப்பர் நேவிகேஷன் மற்றும் டூயல்-சேனல் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650-ஐ அறிமுகப்படுத்தும் நேரத்தில் நான்கு வண்ண விருப்பங்களில் வரும்.  

8 /10

இதில் ஸ்டான்சில் ஒயிட், பிளாஸ்மா ப்ளூ, டிரில் கிரீன் மற்றும் ஷீட்மெட்டல் கிரே கலரில் பைக்குகள் இருக்கும். 13.8 லிட்டர் எரிபொருள் டேங் இருக்கும்.  

9 /10

இந்த பைக்கின் விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த பைக்கை சுமார் ரூ.3.4-3.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அடிப்படை விலையில் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. இதன் விலை Super Meteor 650ஐ விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

10 /10

ஷாட்கன் 650 இன் மோட்டோவர்ஸ் எடிஷனின் ஆரம்ப விலை ரூ.4.35 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இதன் டெலிவரி ஜனவரி 2024 முதல் தொடங்கும்.