இந்திய அணி அதிகாரப்பூர்வமாக உலக கோப்பை 2023 பயணத்தில் இன்று இணைகிறது.
முதல் பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.
இது குறித்து பேசிய யுவராஜ் சிங் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்
2011 ஆம் ஆண்டு சச்சின் கொடுத்த அட்வைஸ் தான் உலக கோப்பை வெல்ல காரணம் என தெரிவித்துள்ளார்.
யுவராஜ் பேசும்போது, அப்போது இந்திய அணி மீது அதிக அழுத்தம் இருந்தது. மக்கள் எப்போதும் இந்திய அணியே வெல்ல வேண்டும் என நினைத்தனர்.
ஆனால் நாங்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி இருந்தோம். அப்போது, போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என சரமாரியான விமர்சனங்கள் எழுந்தன
இது குறித்து அணிக்குள் விவாதிக்கப்பட்டபோது, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் அனைவருக்கும் ஒரு அட்வைஸ் கொடுத்தார்.
அதாவது கவனச் சிதறலை தடுக்க வேண்டும். யாரும் தொலைக்காட்சி மற்றும் செய்திகளை படிக்கவே கூடாது என அறிவுறுத்தினார். வெளியில் செல்லும்போது ஹெட்போனையே பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டு அனைவரும் கடைபிடித்தோம். இதன்மூலம் வெளி விமர்சனங்கள் வீரர்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.
நாங்கள் சிறப்பாக களத்தில் விளையாடி வெற்றி பெற்றோம். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கனவு நனவானது. இம்முறையும் வீரர்கள் அதனையே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.